Friday 31 January 2020

பக்தி விளையாட்டு

அன்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்.....
குரும்பபாளையம் அருள்மிகு ஆதிசக்தி தலைக்காட்டு மாரியம்மன் திருக்கோயில் நோம்பி திருவிழாவை கவிதை நடையில்....
பார்க்க... படிக்க... ரசிக்க... இதோ

Saturday 25 January 2020


ஓம் மலர் மகளே போற்றி
ஓம் மலை மகளே போற்றி...

ஓம் மகிழ் அரசியே போற்றி
ஓம் மக்கள் அரசியே போற்றி...

ஓம் உலக நாயகியே போற்றி
ஓம் உள்ள நாயகியே போற்றி...

ஓம் திருவளர் செல்வியே போற்றி
ஓம் செந்தமிழ் செல்வியே போற்றி...

ஓம் கருணை கன்னியே போற்றி
ஓம் பெருநை கன்னியே போற்றி...

ஓம் திரிசூல தேவியே போற்றி
ஓம் திங்கள்சுடியோன் தேவியே போற்றி...

ஓம் தோகை ராணியே அம்பிகையே போற்றி
ஓம் தென்றல் மேனியே மூகாம்பிகையே போற்றி...

ஓம் பூமாரி பால்மாரி அருள்மாரி தேன்மாரியே போற்றி
ஓம் உருமாரி கருமாரி திருமாரி முத்துமாரியே போற்றி...

ஓம் ஆதிசக்தியே குருவையின் குலமகளே போற்றி குணமகளே போற்றி
ஓம் ஆதிசக்தியே தலைக்காட்டு மாரியே போற்றி... போற்றி...

ஓம் அன்புக்கரசி அன்னைக்கு இன்ப மங்களம்
ஓம் மஞ்சள்மாரி குங்குமகாரிக்கு பூரண மங்களம்
ஓம் விக்னமுருகன் தாயவளுக்கு சந்தான மங்களம்
ஓம் நிரந்தரி வரந்தரி சிவசக்திக்கு சர்வ மங்களம்
ஓம் ஆதிசக்தி அம்மனுக்கு ஆயிரம் கோடி மங்களம்... மங்களம்
ஓம் மங்களம் ஓம் மங்களம் ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் ஓம்...

பக்தி விளையாட்டு

மறுநாள் அற்புதை மனம் குளிர குளிர மகா அபிஷேகங்கள்
மங்கா பால் முகம் ஒளிர ஒளிர பலப்பல தீப ஆராதனைகள்...
பொன் பொருள் கடலென குவிந்தது, மக்கள் மனமுவந்து உபப்பிரதானம்
அன்பர்கள் ஆயிரமாயிரம் ஆயினும் அனைவருக்கும் அன்னதானம்...

விழா சிறப்பிக்க உழைத்தவர்க்கு உளமாற வாழ்த்தி பாராட்டு
உற்றார் உறவினர் நண்பர்களுடன் ஊரேங்கும் மஞ்சள் நீராட்டு...
நோம்பியை வெகுவிமரிசையாக கொண்டாடுவது எங்கள் வாடிக்கை
விரும்பியே விடுவோம் நாங்கள் வண்ணமயமான வாணவேடிக்கை...

இப்படியாக இத்திருவிழா இந்நாளுடன் பெற்றது இனிதே நிறைவு
இதை எண்ணி எண்ணியே எந்நாளும் வற்றாது அடைவோம் மனநிறைவு...
காண கிடைக்காத காட்சிகள் அத்தனையும் கண்ணியம்
கண்டு களிக்க செய்திருக்கணும் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம்...

மாரியே நீ தந்த வரம் பெற்று, உன்னால் ஆசிர்வதிக்கபட்டு
என்னுள் எண்ணம் எழுத்து எல்லாம் தாயே உன் வயப்பட்டு...
மனதில் மலர்ந்தது, கவிதையில் கனிந்தது இந்த பக்தி விளையாட்டு
மண்ணில் எங்கும் என்றும் எல்லாம் உன் சக்தி விளையாட்டு...

அகில நாயகி தாயே ஆதிசக்தி தலைக்காட்டு
ஆடுவோமே உன்னோடு பக்தி விளையாட்டு...

பக்தி விளையாட்டு

மாவிளக்கு ஏந்தி தேவதைகள் திருஉலா இன்று ஊருக்குள்
மாநிலமெங்கும் தேட இதுபோல் திருவிழா இல்லை பாருக்குள்....

யோகம் விநியோகம் அபிஷேக பிரசாத பட்சணம்
வாங்கி பெறுவோம் வாழ்வில் சர்வ லட்சணம்...
யாரும்யாசிக்க பவதிஅங்கைகள் தரும் கோடி வரம் தட்சணம்
யோசிக்காமல் யுவதிமங்கைகள் ஓடி வந்து அங்கப்பிரதட்சணம்...

கரகம் எடுத்து ஆடியே வந்தனர் பூசாரிகள்
நீர் ஊற்றி கூடவே வந்தனர் பாதசாரிகள்...













நடங்கள் நடங்கள் என்றே நகர்ந்தது மக்கள் வழிதடம்
நாங்கள் தலையில் தாங்கி வந்தது அம்மனுக்கு பால் குடம்...

காத்து பார்த்து வளர்த்து கையில் ஏந்தி வந்தோம் முளைப்பாரி
களைப்பு நீங்க  தாயே நீயும் வந்து அமர்ந்து சற்று இளைப்பாறி...

அம்மன் பார்வை பட விலகும் எப்பேர்ப்பட்ட தோஷங்களும்
ஆயுளுக்கும் இனி பிறக்கும் எண்ணற்ற சந்தோஷங்களும்...

மூவுலகிலும் மின்னுவது முக்கண்ணி மூக்குத்தி
பூவுலகிலும் பண்ணுவது பிராத்தனை அலகு குத்தி...

கம்பம் சுற்றி ஓடியாடி பூசாரிகள் பாடியது பாட்டை
பக்தியில் பிறந்த சக்தியில் விளையாடியது சாட்டை...

அம்மா ஆத்தா தாயே மகமாயி மாரியம்மா காதுகளில் ரீங்காரம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்ஆதிபராசக்தி ஒலிக்கும் ஓங்காரம்..

ஒருவழியாக ஓடியாடி விளையாடி விளையாடி ஓய்ந்தனர்
ஓய்ந்தவரெல்லாம் கம்பத்தின் மேல் பாய்ந்தனர்...
வரூடா வருடம் வரலாமென வாக்களித்து வழியனுப்பினர்
அன்போடு அரவணைத்து அக்கம்பத்தை ஆற்றில் அனுப்பினர்...

அகிலநாயகி தாயே ஆதிசக்தி தலைக்காட்டு
ஆடுவோமே உன்னோடு பக்தி விளையாட்டு...

பக்தி விளையாட்டு விநாயகர் வணக்கம்

Thursday 2 January 2020

ஆசை பைத்தியங்கள்

ஆசை பைத்தியங்கள்

எனது நேசம்
என்ற பாசம்
அவளது கேசம் மீதும்
என்றும் தென்றலாய்....
என்றும் மழையாய்....
ஆனால் அவள் மட்டும்
இன்னும் மேகமாகவே....
இன்னும் மௌனமாகவே....

..... சக்திவேல்.....