Friday 14 February 2020

முருகன் மணி மாலைகள் 5


இஷ்டம் என்றாலும் கஷ்டம் வந்தாலும் 
இன்முகனை நினைத்து இருப்பேன்
இன்ப இஷ்டமென்றாலும் துன்ப கஷ்டமந்தாலும்
இன்முகனை நினைத்து இருப்பேன்
அஷ்டம் சென்றாலும் அதிர்ஷ்டம் வென்றாலும்
திசைஅஷ்டம் சென்றாலும் பேரதிர்ஷ்டம் வென்றாலும்
தீஷதனை துதித்து இருப்பேன்.......நான்
தீஷதனை துதித்து இருப்பேன்

இயற்றலும் இசைத்தலும் நின் கரத்தாலே
கற்றலும் பெற்றலும் நின் வரத்தாலே
இயற்றலும் இசைத்தலும் நின் கரத்தாலே
கற்றலும் பெற்றலும் நின் வரத்தாலே
ஆற்றலும் தோற்றலும் நின் கருணையாலே
உற்றலும் நோற்றலும் நின் துணையாலே 
ஆற்றலும் தோற்றலும் நின் கருணையாலே
உற்றலும் நோற்றலும் நின் துணையாலே

இஷ்டம் என்றாலும் கஷ்டம் வந்தாலும் 
இன்முகனை நினைத்து இருப்பேன்
இன்ப இஷ்டமென்றாலும் துன்ப கஷ்டமந்தாலும்
இன்முகனை நினைத்து இருப்பேன்
அஷ்டம் சென்றாலும் அதிர்ஷ்டம் வென்றாலும்
திசைஅஷ்டம் சென்றாலும் பேரதிர்ஷ்டம் வென்றாலும்
தீஷதனை துதித்து இருப்பேன்.......நான்
தீஷதனை துதித்து இருப்பேன்

எயிற்றலும் பயிற்றலும் நின் அருளாலே
பூற்றலும் கீற்றலும் நின் பொருளாலே 
எயிற்றலும் பயிற்றலும் நின் அருளாலே
பூற்றலும் கீற்றலும் நின் பொருளாலே
ஏற்றலும் போற்றலும்  நின் இறையாலே
மாற்றலும் நூற்றலும் நின் மறையாலே
ஏற்றலும் போற்றலும்  நின் இறையாலே
மாற்றலும் நூற்றலும் நின் மறையாலே

இஷ்டம் என்றாலும் கஷ்டம் வந்தாலும் 
இன்முகனை நினைத்து இருப்பேன்
இன்ப இஷ்டமென்றாலும் துன்ப கஷ்டமந்தாலும்
இன்முகனை நினைத்து இருப்பேன்
அஷ்டம் சென்றாலும் அதிர்ஷ்டம் வென்றாலும்
திசைஅஷ்டம் சென்றாலும் பேரதிர்ஷ்டம் வென்றாலும்
தீஷதனை துதித்து இருப்பேன்.......நான்
தீஷதனை துதித்து இருப்பேன்

Tuesday 11 February 2020

முருகன் மணி மாலைகள் 4


கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
வர்ணனை தந்தனை வடிவேலனை  செய் வாழ்த்தினை
வர்ணனை தந்தனை வடிவேலனை  செய் வாழ்த்தினை

அழகனை அமுதனை விளித்தனை தமிழ் இனித்தனை
வேலனை சிங்காரவேலனை நினைத்தனை நிம்மதி நிலைத்தனை
தாமரைபூத்தனை தத்திதவழ்ந்தனை ஆட்டத்தினை ஆடி திளைத்தனை
குமரனை முத்துக்குமரனை  ஜெபித்தனை அடை ஜெயத்தினை

கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
வர்ணனை தந்தனை வடிவேலனை  செய் வாழ்த்தினை
வர்ணனை தந்தனை வடிவேலனை  செய் வாழ்த்தினை

சூழ்ச்சிதனை வெல்லத்தனை மனவுறுதியினை தேக பலத்தினை
தண்டாயுதனை நாடிதனை  விருப்பந்தனை கேள் கிடைத்தனை
அலங்காரத்தினை திருக்கோலத்தினை காணத்தனை வேணும் கொடுப்பினை
மலையினை மருதமலையினை சுற்றினை சுகம் சூழ்ந்தனை இன்பம் நிறைந்தனை

கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
வர்ணனை தந்தனை வடிவேலனை  செய் வாழ்த்தினை
வர்ணனை தந்தனை வடிவேலனை  செய் வாழ்த்தினை

Monday 10 February 2020

மெட்டும்.... பாட்டும்

வணக்கம் நண்பர்களே
"காற்று வாங்க போனேன்"
என்ற பழைய பாடலுக்கு 
புதிய வரிகளை தந்துள்ளேன்...
காவியக்கவிஞர் வாலியின் 
வரிகளுக்கு ஈடு இணை இல்லை...
இருந்தாலும் 
பழைய பாடல்கள்
புதிய வரிகள்
அழகு தமிழ் பயிற்சி
இந்த புதிய முயற்சி...
பாடி... படிக்க... ரசிக்க...இதோ...
...

Saturday 8 February 2020

முருகன் மணி மாலைகள் 3


கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
கீர்த்தனை தந்தனை வேலனை  செய் வந்தனை
கீர்த்தனை தந்தனை வேலனை  செய் வந்தனை

பரனை குருபரனை குமரகுருபரனை பண் ஆராதனை
பவனை சரவணபவனை யோசனை தரும் செல்வம்தனை
நெற்றிதனை நெஞ்சுதனை கரந்தனை இடு திருநீறுனை
அத்தனைவினை அழித்தனை பக்தனை அது காத்தனை

கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
கீர்த்தனை தந்தனை வேலனை  செய் வந்தனை
கீர்த்தனை தந்தனை வேலனை  செய் வந்தனை

உள்ளந்தனை வைத்தணை ஷடாக்ஷரனை படி கவசந்தனை
கேயனை காங்கேயனை கண்டுதனை பெறு ஞானந்தனை
பாலனை சக்திபாலனை  அமுதனை தமிழமுதனை வை புலம்தனை
பழனிதனை பவனிதனை பார்த்தனை வரும் யோகந்தனை பெரும் புகழ்தனை

கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
கீர்த்தனை தந்தனை வேலனை  செய் வந்தனை
கீர்த்தனை தந்தனை வேலனை  செய் வந்தனை

Thursday 6 February 2020

முருகன் மணி மாலைகள் 2

அன்பர்கள் அனைவருக்கும் 
இனிய வணக்கம்,
முருகன் மணி மாலைகள் 
எம்பெருமான்
முருகப்பெருமான் 
புகழ் பாடும் கவி மாலைகள்...
பார்க்க... படிக்க... ரசிக்க... இதோ...

கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
நற்பண்னை தந்தனை குகன்தனை  செய் நவில்ந்தனை
நற்பண்னை தந்தனை குகன்தனை  செய் நவில்ந்தனை

எத்தனை வல்வினை செய்வினை வர நிந்தனை
நினை நிமலனை முருகனை தீரும் வேதனை
வேண்டினை வேலனை வந்தனை நல் இன்பந்தனை
வாஞ்சனை பிராத்தனை வடிவேலனை பெறு வரந்தனை

கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
நற்பண்னை தந்தனை குகன்தனை  செய் நவில்ந்தனை
நற்பண்னை தந்தனை குகன்தனை  செய் நவில்ந்தனை

காஞ்சனை நிறத்தனை கார்த்திகேயனை புகழ்ந்தனை பேறு கல்விதனை
மனந்தனை மலர்ந்தனை மால்மருகனை துதிப்போர் மகிழ்ந்தனை
அகந்தனை திறந்தனை அழகனை அர்ச்சனை தரு அரியாசனை
முருகனை ஆறுமுகந்தனை தரிசனை கிட்டும் நாளும் நலந்தனை வாழ்வில் வளந்தனை

கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
நற்பண்னை தந்தனை குகன்தனை  செய் நவில்ந்தனை
நற்பண்னை தந்தனை குகன்தனை  செய் நவில்ந்தனை

🙏🌼🌺🏵️🌻சக்திவேல்🌻🏵️🌺🌼🙏

Tuesday 4 February 2020

முருகன் மணி மாலைகள்

அன்பர்கள் அனைவருக்கும் 
இனிய வணக்கம்,
முருகன் மணி மாலைகள் 
எம்பெருமான் 
முருகப்பெருமான் 
புகழ் பாடும் கவி மாலைகள்...
பார்க்க... படிக்க... ரசிக்க... இதோ...
குறிஞ்சியிலே கொஞ்சும் குலாவும் அலையலையாய் மலைகள்
குன்றிலே அவ்வெழில் மிஞ்சும்  அழகழகாய் குமரன் சிலைகள்....
ஞாயிறு தரும் நாளும் காலை மாலை வேளைகள்
ஞானருள் பெற பாடுவோம் முருகன் மணி மாலைகள்.....

இன்பாம்பிகை இருள்நீக்கிஸ்வரர் ஈன்ற இறைமகனே
இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் தருவோனே இளமுகனே...
நான்முகனும் முக்கண்ணனும்  வேதப்பொருள் பெற்ற திருகுகனே
தேவதை தெய்வானை வனமலர் வள்ளி தேவியர் தேடிய  சூடிய சண்முகனே...

ஆனைமுகனோடு அண்டமெல்லாம் ஓடியது ஆடியது ஆறுமுகம்
ஆயுதங்கள் ஏந்தி அசுரர் படை தாக்கியது நூறு முகம்...
அன்பர்க்கு பண்பர்க்கு நண்பர்க்கு  காட்டுவது திருமுகம்
அழகு அள்ளும் காண்போர் உள்ளம் துள்ளும் உன்முகம் இன்முகம்...

நற்றமிழர் காடு திருத்தி பாடுபட்டு செய்தது கழனி
நாரதர் கலகத்திலே உலகத்திலே வேலன் உலவியது பழனி...
நாடி தேடி ஓடி வரும் பக்தர்க்கு என்றுமே தருவாய் பலம் நீ
நிமலா நல்லோர் நம்பினோர் பிறவிக்கடல் கடக்குதவும்  கலம் நீ...

திருக்கார்த்திகை பெண்களோடு விளையாடி வளர்ந்தது குறும்பு பாலன்
திரண்ட தோள் கொண்டு சூரனை வதைத்தது செந்தூர் வேலன்...
ஆண்டவரும் அகத்தியரும் தொடங்கிய முத்தமிழ் சங்க தலைவன்
ஔவையோடும் கிரனோடும் விளையாடிய வேலவன் தமிழ் புலவன்...

காவடி வைத்து கட்ட வேண்டும் வண்ணமிகு மயிலிறகு
கந்தனை நினைத்து போற்றி பாடி உளமுருகு மனமுருகு....
திருவடி தரிசனம் கிட்ட வேண்டும் வாழ்த்தி வணங்கி தாழ் மருகு
தினமும் நலம் காக்கும் பால முருகு.... வருக வந்து தீந்தமிழ் பருகு...

வண்ண வண்ண பூக்கள் பறித்து சூடுவோம் அழகனுக்கு மலர் மாலைகள்...
அமிழ்து தமிழ் பாக்கள் பறித்து பாடுவோம் முருகன் மணி மாலைகள்...

இன்னும் பூக்கள் பூக்கும்...
மின்னும் பாக்கள் பறிக்கும்...