Sunday 13 September 2020

ஆசை பைத்தியங்கள் - திருடு


புன்னகை திருடு
பூக்களை போல....
பூக்களை திருடு
பூவையை போல....
பூவையை திருடவா....
பூமாலை சூடவா....

உறக்கம் திருடு
கனவை போல....
கனவை திருடு
கன்னியை போல....
கன்னியை திருடவா....
கண்ணுக்குள் வைக்கவா....

மழையை திருடு
மேகம் போல....
மேகம் திருடு
அவள் தேகம் போல....
தேகத்தை திருடவா....
தேவதையை தீண்டவா....

குயிலை திருடு
கருமை போல....
கருமை திருடு
அவள் கூந்தல் போல....
கூந்தலை திருடவா....
கூடுகட்டி ஒளியவா....

இனிமை திருடு
மொழியை போல....
மொழியை திருடு
மௌனம் போல....
மௌனத்தை திருடவா....
மனதை திறக்கவா....

நிறத்தை திருடு
தங்கம் போல....
தங்கம் திருடு
அவள் அங்கம் போல....
அங்கம் திருடவா....
சங்கம் தொடங்கவா....

சிகப்பை திருடு
செர்ரி பழங்கள் போல....
செர்ரி பழங்கள் திருடு
அவள் இதழ்கள் போல....
இதழ்கள் திருடவா....
இமைகள் மூடவா....

அழகை திருடு
அவளை போல....
அவளை திருடு
வெட்கங்கள் போல....
வெட்கங்கள் திருடவா....
வேலிகள் தாண்டவா....

அன்பை திருடு
இதயம் போல....
இதயம் திருடு
சந்திரனை போல....
சந்திரனை திருடவா....
சந்ததிக்கு விளையாடவா....

வெளிச்சம் திருடு
இரவை போல....
இரவை திருடு
சூரியனை போல....
சூரியனை திருடவா....
சூடமாக்கி சுத்தவா....

கண்கள் திருடு
காதலை போல....
காதலை திருடு
இதயம் போல....
இதயம் திருடவா....
இன்னும் தொடரவா....

Thursday 20 August 2020

சரணம் ஐயப்பா

ஹரிவராசனம் விஸ்வமோகனம்
என்ற புகழ்பெற்ற இனிமையான 
சுவாமி ஐயப்பன் தாலாட்டு பாடலுக்கு 
தமிழில் புதிய வரிகள் அதே ராகத்தில் பாட... 
(முடிந்த வரை அர்த்தம் மாறாமல்)

ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

எழில்விஷ்ணு மைந்தனே விஸ்வன் மைந்தனே
பேரண்டம் ஆண்டாவ பாதராதித்தோம்
தீமை அழிப்பவன் திசைகள் ஆள்பவன்
அரிஆனன்மகன் திருபாதத்தஞ்சமே

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

Saturday 15 August 2020

M S Dhoni

Game Lifters Hopes Heighters
Great Gifters Hands Sharpers
True Fighters Core Sporters
Heart Lighters Cool Headers
One is a scrapper crafter built a shot helicopter
One is a catcher crafter quicker like a Grasshopper
Game Changers... Fame Flowers
Crowd Pullers... Cricketers Lovers
Fast Runners... More Fan Followers
Most Winners... Forever Best Cricketers...
Miss Ur both skills on the blue heads...
Wish U both smiles on the years ahead...

Sakthivel

Sunday 9 August 2020

முருகன் மணி மாலைகள்


பழநி பாலனே பழமுதிர் வேலனே
தணிகை குமரனே செந்தூர் வீரனே....
குன்றின் தலைவனே சுவாமி நாதனே
அழகனே அமுதனே பஞ்சா அமிர்தனே....

வா வா முருகா வெற்றிவேல் முருகா 
வா வா முருகா வண்ணமயில் வாகனா....
வா வா முருகா திருமால் மருகா 
வா வா முருகா சேவற்கொடி இறைவா....

அரோகரா முருகனே ஆறுமூக அழகனே....
அரோகரா முருகனே  ஓம் சிவசக்தி குமரனே....

எடுத்து வந்தோம் ஆடி ஆடி மயிலிறகு காவடியை 
நினைத்து வந்தோம் ஓடி ஓடி இளமுருகு திருவடியை....
படித்து வந்தோம் கவசம் பாடி தினமுருக புகழடியை
பணிய வந்தோம் நாடி நாடி  உளமுருக மலரடியை....

வா வா முருகா பால்குட பாலகா
வா வா முருகா பன்னிர் குட வேலவா....
வா வா முருகா மலைக்கோயில் முன்னவா
வா வா முருகா மனக்கோயில் மன்னவா....

அரோகரா முருகனே அக்னிபூ தேவனே....
அரோகரா முருகனே ஓம் சரவணபவனே....

Tuesday 28 July 2020

சிவ சிந்தனை 3


என்னென்ன எண்னென்ன எழுத்தென்ன எல்லாமென
எனக்களிக்கும் எம்பிரான் எண்ணமே...

அகமென்ன புறமென்ன அழகென்ன அறிவென்ன
அள்ளித்தரும் அம்பலவாணன் அருந்தவமே...

பண்னென்ன பொன்னென்ன மண்னென்ன மலரென்ன
மகிழ்ச்சிவருமே மதிசூடினன் மகத்துவமே...

முன்னென்ன பின்னென்ன முதலென்ன முடிவென்ன
முக்திதருவான் முக்கண்ணன் முன்னமே...

Thursday 23 July 2020

ஆசை பைத்தியங்கள்

அன்றாட வேலைகள்
அலுத்து போயினும்....
அவசர சாலைகள்
சலித்து போயினும்....
அல்லல்கள் ஆயிரமாயினும்....
அவ்வப்போது வந்து போகும் ஒரு தனி சுகம்
மனதில் வந்து மோதும் அவள் முகம்....

Tuesday 21 July 2020

வாலிக்கு ஒரு லாலி


வணங்குகிறேன் எம் தமிழ் கவியே வாலி 
மயங்குகிறேன் உன் தமிழ் கவிகளை பாடி
காவிய கவியே கவிதை அருவியே
வாலிப வாலியே வாழிய வாழியவே

காவிரித்தாய் கரை புரண்டாள் 
நீர் வெள்ளமாய் ஓடியது  திருச்சியில் ஊரெங்கும்
தமிழ்த்தாயும் ஆசை கொண்டதால்
நீர் வெல்லமாய் பாடவே உன்னை பெற்றதோ ஸ்ரீரங்கம்

கனவு கண்டது 
மாலி போல் ஓவிய கலைஞனாக
கலைமகள் ஆக்கியது 
வாலி என்னும் காவிய கவிஞனாக

நீ...கம்பன் வீட்டு தோட்டத்தில் மலர்ந்த கவிதை விதையோ
வள்ளுவன் விட்டு சென்ற ஓலைகளின் மிச்சமோ சொச்சமோ 

இசைவாணர்கள் இசை மாலையாய் மெட்டுக்களை மீட்ட மீட்ட
கவி சோலையில் இனிய பாடல் மொட்டுக்களை நீ அவிழ்த்தாய்

வார்த்தை வராமல் அலையும் சில சமயம் பேனா மூக்கு
வித்தைக்காரர் வெற்றிலை பாக்கு தரிக்க சிவந்தது நாக்கு
பாடல் வரவழைக்க விரித்தது சிவப்பு கம்பள வரவேற்பு
வந்து விழ விழ சிந்தனையாளர்க்கே வரும் வியப்பு

பாட்டுக்கு மெட்டா மெட்டுக்கு பாட்டா
ஏட்டிக்குப் போட்டியா எதுவாயினும் 
உன் கற்பனை கொட்டியது அழக அழகாய் பல்லவியில்
விற்பனை செய்தது மலை மலையாய் சரணத்தில்

ஏர் பிடிக்கும் உழவன் பூட்டியது மாட்டு வண்டி
பார் வியக்கும் புலவன் நீ கட்டியதோ பாட்டு வண்டி

நீ பாட்டுக்கு தந்தது புது புது அர்த்தம் அகரம்  
நீ பாட்டுக்கு எழுதி எழுதி தொட்டது எண்ணற்ற சிகரம்

திரையில் தலைவர்கள் ஆடிப்பாடி நடித்தனர் 
நீ தீட்டிய கொள்கை பாட்டில் காட்சியை
நிஜத்தில் மக்களும் ரசித்தனர் மயங்கினர்
நடித்தனர் பிடித்தனர் நாட்டில் ஆட்சியை

சொல்லாட்சி வளர்த்தது கொள்கையை தமிழ் திரைப்பாட்டில்
நல்லாட்சி மலர்ந்தது திராவிடர் திருநாட்டில்

புதுமை தமிழில் நீ அலங்கார அரசன்
உன் புதுக்கவிதையில் பூத்ததோ அவதார புருஷன்

உன் போல் சொல் ஆண்டவர் யார் சாமி
என சொல்லவே படைத்தாயோ பாண்டவர் பூமி

பக்தி கடலில் நீ மூழ்கி எடுத்த வெண்மணி முத்து
தமிழ் கடவுள் என்னும் பொன்கவிதை கொத்து

இது மட்டுமா உன் தமிழ் சோலையில்... கவி மாலையில்...
இன்னும் எத்தனையோ இலக்கிய பூக்கள்... இன்னிசை பாக்கள்...

என்னை போல் பலருக்கு என்றும் நீ மானசிக குருவே
உன்னை மனதார எண்ணினால் போதுமே 
கற்பனை வருமே நீ கற்பக தருவே

இருந்த வரை இளங்கவிகளுக்கு 
உன் வீடு ஒரு வேடந்தாங்கல்
இன்று மட்டும் என்ன வெண்மேக தாடியில் 
நீ வெளிவந்து சிரிக்கும் வானமே எங்கள் வேடந்தாங்கல்

வான் புகழ் கொண்ட வாலி வாலி
நின் புகழ் என்றும் வாழி வாழி
தேன் துகள் சொல் தேடி தேடி
என் தமிழ் பாடும் உமக்கு லாலி லாலி

Saturday 18 July 2020

அமுதே தமிழே


அழகாய் பழகும் நாவில் நற்றமிழ்
அமுதாய் திகழும் பாவில்  பைந்தமிழ்....
தேனில் ஊறும் சுவையாய் தீந்தமிழ்
மலரில் வீசும் மணமாய் பூந்தமிழ்....

மாய விண்ணில் ஒளி கண்டு
தாய் மண்ணில் ஒலி கொண்டு 
வாழ்வில் வழி தேடியது மானுடம்....
ஆண்டவன் அருளை கொண்டு
அகத்தியர் அகரம் கண்டு
வாழ்வியல் மொழி கண்டது தமிழிடம்....

தெய்வீக வரம் பெற்றெழுந்து
தொல்காப்பியர் இலக்கணம் கற்றெழுதி
முத்தமிழ் பெற்றது முழுவடிவம்....
கன்னித்தமிழ் எய்தினாள் முழுப்பருவம்....

மா வேந்தர்கள் கற்குவியல்
எடுத்து எழுப்பியது 
திருக்கோயில்கள்.....
பா வேந்தர்கள் சொற்குவியல்
எடுத்து எழுதியது
சொற்க்கோயில்கள்.....

எந்நாளும் புலவர் பெருங் கூட்டம்
ஓடியது தேடியது தமிழ் காட்டை....
மண்ணாளும் மன்னர் தர பட்டம்
பாடியது ஆடியது பாட்டு வேட்டை....

கவிகள் பலராம் நாட்கள் பலவாம் 
நீந்தியது உலாவியது செந்தமிழ் கடலில்....
செவிகள் எல்லாம் ஏட்டுகள் எல்லாம் 
நிரம்பியது வழிந்தது கன்னித்தமிழ் பாடலில்....

இறைவனும் கேட்டுத்தான்
ஆடினான் பார் சொக்கி....
இசைக்கும் தமிழுக்கும்
மயங்காதோர் யார் பாக்கி....

Thursday 9 July 2020

மெட்டும் பாட்டும் 6


அம்மன் அவள் அழகு மலர்
இன்பம் தரும் அன்பு மலர்
அங்கம் எல்லாம் தங்க மலர்
பொங்கும் நெஞ்சில் ஆசை மலர்
கைகள் பற்றி தினம் அழைத்து
உன் பெயரை உச்சரிக்க
மங்கை மனம் மலராதோ
மஞ்சள் முகம் சிரிக்காதோ
அம்மன் அவள் அழகு மலர்
இன்பம் தரும் அன்பு மலர்
அங்கம் எல்லாம் தங்க மலர்
பொங்கும் நெஞ்சில் ஆசை மலர்

உன் மனதில் இடம் பிடிக்க
ஓடி வந்தேன் தடம் முழுக்க
பக்தன் மனம் புரியாதோ
கண் அசைக்க கூடாதோ
உன் மனதில் இடம் பிடிக்க
ஓடி வந்தேன் தடம் முழுக்க
பக்தன் மனம் புரியாதோ
கண் அசைக்க கூடாதோ

பூவும் பொன்னும் கலந்திருக்கும்
மின்னும் வண்ணக்கன்னம்மம்மா
கெஞ்சி கெஞ்சி அருகில் வந்து
கொஞ்சம் உன்னை கொஞ்சட்டும்மா

திங்கள் சூடும் பொழுதினிலே
ஓடும் இன்ப வெள்ளமிது
பெண்கள் இடும் பொட்டுகளோ
மங்களத்தின் மொத்தமது

பேசும் மலர் சித்திரத்தை
உன் விழிகள் காட்டுதம்மா
இரவில் வரும் நித்திரையை
இரவல் கொஞ்சம் தாரும்மம்மா

செய்யுள் கொண்டு புகழ் பாடி
செந்தமிழில் பாச்சூடி
ஊஞ்சல் வைத்து தாலாட்ட
உள்ளம் போகும் தலையாட்ட

செய்யுள் கொண்டு புகழ் பாடி
செந்தமிழில் பாச்சூடி
ஊஞ்சல் வைத்து தாலாட்ட
உள்ளம் போகும் தலையாட்ட

மொட்டு அவிழ்ந்த பூக்களலெல்லாம்
இதழ்வெளியில் விரியுதம்மா
என் நினைவில் நான் இல்லை
மயக்கம் தீர வாரும்மம்மா

அம்மன் அவள் அழகு மலர்
இன்பம் தரும் அன்பு மலர்
அங்கம் எல்லாம் தங்க மலர்
பொங்கும் நெஞ்சில் ஆசை மலர்
கைகள் பற்றி தினம் அழைத்து
உன் பெயரை உச்சரிக்க
மங்கை மனம் மலராதோ
மஞ்சள் முகம் சிரிக்காதோ
ஆராரிரோ  ஆராரிரோ
ஆராரிரோ  ஆராரிரோ


Saturday 27 June 2020

மெட்டும் பாட்டும் 4


நீலவானம் நீலவும்மேகம் நீந்துதே
நீயும்வா அழைக்கலாம் அணைக்கலாம்

நீலவானம் நீலவும்மேகம் நீந்துதே
நீயும்வா அழைக்கலாம் அணைக்கலாம்

மூங்கில் பாடும் ஓசைகள் தென்றலில் மிதக்க
கண்கள் தேடும் ஆசைகள் காட்சியில் கரைய
காரிகை வண்ணம் கலைஎண்ணம்  எழில் அன்னம்
பூவிழி மயக்க இதழ் பதிக்க இடை இழுக்க...
இரவெல்லாம்.... இரவெல்லாம்....
உன்மடியிலே.... இனிவிடியவே....

நீலவானம் நீலவும்மேகம் நீந்துதே
நீயும்வா அழைக்கலாம் அணைக்கலாம்

நீலவானம் நீலவும்மேகம் நீந்துதே

தந்தனே தானே ஹோய் ஹோய் ஹோய் தந்தானே தானே
தந்தனே தானே ஹோய் ஹோய் ஹோய் தந்தானே தானே
தந்தனே தானே நா தாந்தானே தானா
தந்தனே தானே நா தாந்தானே தானா

இளமை நாடும் இன்பங்கள் உறவிலே இனிக்க
பதுமை சூடும் மாலைகள் மஞ்சத்தில் மணக்க
தாரகை மின்னும் தேன்கிண்ணம் இவள் கன்னம்
பூமுகம் சிவக்க மலர் பறிக்க மனம் மயங்க
இமயம் தான்.....இமயம் தான்.....
கரைந்ததே..... கனிந்ததே.....

நீலவானம் நீலவும்மேகம் நீந்துதே
நீயும்வா அழைக்கலாம் அணைக்கலாம்

நீலவானம் நீலவும்மேகம் நீந்துதே

Friday 19 June 2020

மெட்டும் பாட்டும் 3

மழைமேகம் கூடுது ஓடுது காற்றில்ஆடுது
வானில் வண்ணக் கோலம் போடுது
வெண்மேகம் முட்டுது மோதுது சேர்ந்தேநெருங்குது
மோகம் தீர்க்கும் காலம் தேடுது...

தூறல் தான் வந்தாலும் துள்ளும் மயில் கூட்டம்
சாரல் பட்டாலே பூவெல்லாம் போடும் ஆட்டம் பாட்டம்...

மழைமேகம் கூடுது ஓடுது காற்றில்ஆடுது
வானில் வண்ணக் கோலம் போடுது
வெண்மேகம் முட்டுது மோதுது சேர்ந்தேநெருங்குது
மோகம் தீர்க்கும் காலம் தேடுது...

ஒரு மின்னல் கீற்று ஒளி வீசும்
அதன் பின்னால் கத்தும் இடி பேசும்
நீர் போகும் இடமெல்லாம் புல் முளைக்கும்
கல்லுக்குள் விழுந்தாலும் உயிர் செழிக்கும்...

மழையே நீ எட்டி பார்க்கும் பாலை
மாறாதோ மலர் பறிக்கும் சோலை...

மண்வாசம் பூவாசம் மணம்வீசும்
நன் நாளே நீ வந்தாலே
இனி வாழ்வில் அந்நாள் திருநாள்...

மழைமேகம் கூடுது ஓடுது காற்றில்ஆடுது
வானில் வண்ணக் கோலம் போடுது
வெண்மேகம் முட்டுது மோதுது சேர்ந்தேநெருங்குது
மோகம் தீர்க்கும் காலம் தேடுது...

தூறல் தான் வந்தாலும் துள்ளும் மயில் கூட்டம்
சாரல் பட்டாலே பூவெல்லாம் போடும் ஆட்டம் பாட்டம்...

மழைமேகம் கூடுது ஓடுது காற்றில்ஆடுது
வானில் வண்ணக் கோலம் போடுது
வெண்மேகம் முட்டுது மோதுது சேர்ந்தேநெருங்குது
மோகம் தீர்க்கும் காலம் தேடுது...

நதி ஓடும் அழகில் மதி மயங்கும்
மாலை கதிரும் நிலவும் முகம் பார்க்கும்
நீர்க்கொட்டும் ஓசைகள் இசையாகும்
ஏர்ப்பிடிக்கும் உழவர்கள் மனம்மகிழும்...

ஆறேநீ காட்டில் மேட்டில் பிறந்து
அணையே உன் தொட்டில் விழுந்து தவழ்ந்து...

வான்ரசிக்கும கார்மேகம் உன்தேகம்
பூ மழையும் புயல் மழையும்
கடல் சேரும் உறவே இனிதே...

மழைமேகம் கூடுது ஓடுது காற்றில்ஆடுது
வானில் வண்ணக் கோலம் போடுது
வெண்மேகம் முட்டுது மோதுது சேர்ந்தேநெருங்குது
மோகம் தீர்க்கும் காலம் தேடுது...

தூறல் தான் வந்தாலும் துள்ளும் மயில் கூட்டம்
சாரல் பட்டாலே பூவெல்லாம் போடும் ஆட்டம் பாட்டம்...

மழைமேகம் கூடுது ஓடுது காற்றில்ஆடுது
வானில் வண்ணக் கோலம் போடுது
வெண்மேகம் முட்டுது மோதுது சேர்ந்தேநெருங்குது
மோகம் தீர்க்கும் காலம் தேடுது...

Sunday 31 May 2020

மெட்டும் பாட்டும் 2

அழகே உன்னை காணவே அகிலம் முழுதும் தேடினேன்
அருகில் அமரக் கண்டதும் ஆனந்த மழையில் ஆடினேன்
செண்பகமும் உன்முகமும் அதிசய அற்புதங்கள்
செவ்வந்தியும் உன்முந்தியும் சேர்ந்தே அசையும் தென்றலில்

ம்ம்ம்....ஒ.....ஓ.....ஓ
லளலளலளா......லளலளலளா.....லளலளலளலலலலலளா.......
ம்ம்ம்....
கங்கை நதி புனிதத்தில் நீராட வரூவாயா
மங்கை என் மனத்தினை போராட விடுவாயா

நீர் நனைத்த பொன்னுடம்பை நான் அணைத்து துடைக்கட்டுமா
அங்கங்கள் அழகை சொல்ல சிற்பம் செதுக்கட்டும்மா

ஒ....மன்னா உந்தன் மார்பில் மயங்கி போகின்றேன்
தெளிந்த பின்னும் தயங்கி மீண்டும் மயங்க பார்க்கின்றேன்

அழகே உன்னை காணவே அகிலம் முழுதும் தேடினேன்
ஒ...அருகில் அமரக் கண்டதும் ஆனந்த மழையில் ஆடினேன்
செண்பகமும் உன்முகமும் அதிசய அற்புதங்கள்
ஒ...செவ்வந்தியும் உன்முந்தியும் சேர்ந்தே அசையும் தென்றலில்

அழகே உன்னை காணவே அகிலம் முழுதும் தேடினேன்
ஒ...அருகில் அமரக் கண்டதும் ஆனந்த மழையில் ஆடினேன்

ம்ம்ம்....புண்சிரிப்பும் கண் பறிக்கும் பூவிதழ்கள் கவர்ந்திழுக்கும்
கண்மணி உன் கார்குழலில் ஒளிந்து கொள்ளட்டுமா....ஆ

ஆ....ஆசைக்கு அறிவில்லை அதற்கும் ஓர் அளவில்லை
அளவில்லா ஆசை வைத்தேன் அதை நீ அறிவாயா

அக்கம் பக்கம் பார்த்து இடையே கிள்ளட்டும்மா
யாரோ என எண்ணி நீ என்னை கொஞ்சம் அடித்தால்லென்ன

ல ல லல… ல ல ல ல ல

அழகே உன்னை காணவே அகிலம் முழுதும் தேடினேன்

லல… ல ல ல லல… ல

ஒ...அருகில் அமரக் கண்டதும் ஆனந்த மழையில் ஆடினேன்

செண்பகமும் உன்முகமும் அதிசய அற்புதங்கள்
செவ்வந்தியும் உன்முந்தியும் சேர்ந்தே அசையும் தென்றலில்

அழகே உன்னை காணவே அகிலம் முழுதும் தேடினேன்
ஒ...அருகில் அமரக் கண்டதும் ஆனந்த மழையில் ஆடினேன்

Thursday 28 May 2020

சிவ சிந்தனை 3

அன்பே சிவமே ஆலகாலம் உண்ட நீலகண்டனே
அன்பே சிவமே ஆலகாலம் உண்ட நீலகண்டனே
வரம் தரும் சிவனருட்பா
வரம் தரும் சிவனருட்பா
வளமோடு கலைகளை தா
வளமோடு கலைகளை தா
சிவனை நாளும் நீ நாடு
சிவனை நாளும் நீ நாடு

சிவனை நாளும் நீ நாடு
சிவனை நாளும் நீ நாடு
அன்பே சிவமே ஆலகாலம் உண்ட நீலகண்டனே
அன்பே சிவமே ஆலகாலம் உண்ட நீலகண்டனே

நாட்டியத்தின் நாயகனே நாடறியும் உன் நடனம்
நாட்டியத்தின் நாயகனே நாடறியும் உன் நடனம்
திருச்சபைகள் கலை பயிலும்
உன்திருவடிகள் தினம் பணியும்
வான் மழையாய் பொழியும் இசையும் அதில்
உள்ளம் மகிழ்ந்து துள்ளும்
வான் மழையாய் பொழியும் இசையும் அதில்
உள்ளம் மகிழ்ந்து துள்ளும்
அன்பையெங்கும் அள்ளிக்கொடு
சிவனை நாளும் நீ நாடு

அன்பே சிவமே ஆலகாலம் உண்ட நீலகண்டனே

முத்தமிழும் முப்பொருளும் முக்கனியும் முத்தணியும்
முத்தமிழும் முப்பொருளும் முக்கனியும் முத்தணியும்
திருவருளும் தினமருளும்
காரிருளும் கலைந்தொளிரும்
என் தவமும் மனமும் சிவமுகமே
சிவனிருந்தால் துன்பமேது
என் தவமும் மனமும் சிவமுகமே
சிவனிருந்தால் துன்பமேது
எமன்வந்தும் பயந்தோட 
சிவனை நாளும் நீ நாடு....

அன்பே சிவமே ஆலகாலம் உண்ட நீலகண்டனே
வரம் தரும் சிவனருட்பா.....அருட்பா.
வளமோடு கலைகளை தா.....கலைகளை தா...
சிவனை நாளும் நீ நாடு
அன்பே சிவமே ஆலகாலம் உண்ட நீலகண்டனே

Tuesday 28 April 2020

சிவ சிந்தனை


வணக்கம்
அன்பர்களே நண்பர்களே
சிவன் சிந்தனை 
என்ற தலைப்பில்
சில கவிதைகள் 
சில பாடல்கள்...
தாய் மூகாம்பிகை
திரைப்படத்தில் இடம்பெற்ற 
ஜனனி ஜனனி என்ற
தெய்விக பாடலுக்கு  
தேவன் ஆதிசிவனை போற்றி 
புதிய வரிகள்....
பாட... படிக்க... ரசிக்க... இதோ...

Wednesday 4 March 2020

முருகன் மணி மாலைகள் 6


தங்கமயில் வாகனன் முருகன்
தங்கமாக உடல் ஜொலிக்கும் அழகன்

அழகன், கருணை மயில் வாகனன்  முருகன்
கருணை பொழியும் கண்கள்கொண்ட கந்தன்

கந்தன், முத்து மயில் வாகனன் முருகன்
முத்து தெரிக்க சிரிக்கும் திருக்குமரன்

குமரன், பவள மயில் வாகனன் முருகன்
பவள வாய் புன்னகைக்கும் அமுதன்

அமுதன், மின்னும் மயில் வாகனன் முருகன்
கன்னம்  மின்னும்  கவரும் கதிர்காமன்

கதிர்காமன், பறக்கும் மயில் வாகனன் முருகன்
பரந்துவிரிந்த தோள்கள் கொண்ட பவனவன்

பவன், பன்னீர் மயில் வாகனன் முருகன்
பன்னிரு கரங்கள் காக்கும் கதிர்வேலவன்

வேலன், தேவ மயில் வாகனன் முருகன்
தேக்கு தேகம் தேரும்பெற்ற தென்முகன்

தென்முகன், நீல மயில் வாகனன் முருகன்
நீண்ட நெடுங்கால்கள் கொண்ட நிமலனவன்

நிமலன், அழகு மயில் வாகனன் முருகன்
அழகெல்லாம் குடி கொண்ட குகனவன்

குகன், வெள்ளி மயில் வாகனன் முருகன்
வள்ளி துள்ள கிள்ளியவன் கிழவன்

கிழவன், வண்ண மயில் வாகனன் முருகன்
வண்ண மலர்கள் சூடும் வடிவேலன்

வடிவேலன், அமிர்த மயில் வாகனன் முருகன்
பஞ்சாமிர்த சுவைக்கதரும் பழநி பிரீதன்

பிரீதன், பச்சை மயில் வாகனன் முருகன்
இச்சை தீர்த்து அருள்புரிவான் இன்முகன்

இன்முகன், ஞானமயில் வாகனன் முருகன்
ஞானியர் பற்றி சுற்றிவந்த செல்வனவன்

செல்வன், யோக மயில் வாகனன் முருகன்
யோகங்கள் கொட்டி கொட்டி தரும் சண்முகன்

சண்முகன், போக மயில் வாகனன் முருகன்
போகர் யோகர் சிலைவடித்த தண்டபாலன்

பாலன், தோகை மயில் வாகனன் முருகன்
தோளோடு தோள் கொடுக்கும் தோழனவன்

தோழன், வீர மயில் வாகனன் முருகன்
வீராதி வீரன் எங்கள் வேலனவன்

வேலன், வெற்றி மயில் வாகனன் முருகன்
வெற்றிகள் முரசு கொட்டும் வெற்றிவேலன்

வேலன், தமிழ் மயில் வாகனன் முருகன்
முத்தமிழோடு கலந்தாடும் விளையாடும் குருபரன்

பரன், ஏறும் மயில் வாகனன் முருகன்
நூறுமுகம் எடுத்து காட்டும் திருமுகன்

திருமுகன், இன்ப மயில் வாகனன் முருகன்
இன்பம் பொங்க இனிமை பெருக்கும் இளமுகன்
அன்புவாழ அகிலமாள ஆறுமுகன் ஏறிவரணும் தங்கமயில்

Friday 14 February 2020

முருகன் மணி மாலைகள் 5


இஷ்டம் என்றாலும் கஷ்டம் வந்தாலும் 
இன்முகனை நினைத்து இருப்பேன்
இன்ப இஷ்டமென்றாலும் துன்ப கஷ்டமந்தாலும்
இன்முகனை நினைத்து இருப்பேன்
அஷ்டம் சென்றாலும் அதிர்ஷ்டம் வென்றாலும்
திசைஅஷ்டம் சென்றாலும் பேரதிர்ஷ்டம் வென்றாலும்
தீஷதனை துதித்து இருப்பேன்.......நான்
தீஷதனை துதித்து இருப்பேன்

இயற்றலும் இசைத்தலும் நின் கரத்தாலே
கற்றலும் பெற்றலும் நின் வரத்தாலே
இயற்றலும் இசைத்தலும் நின் கரத்தாலே
கற்றலும் பெற்றலும் நின் வரத்தாலே
ஆற்றலும் தோற்றலும் நின் கருணையாலே
உற்றலும் நோற்றலும் நின் துணையாலே 
ஆற்றலும் தோற்றலும் நின் கருணையாலே
உற்றலும் நோற்றலும் நின் துணையாலே

இஷ்டம் என்றாலும் கஷ்டம் வந்தாலும் 
இன்முகனை நினைத்து இருப்பேன்
இன்ப இஷ்டமென்றாலும் துன்ப கஷ்டமந்தாலும்
இன்முகனை நினைத்து இருப்பேன்
அஷ்டம் சென்றாலும் அதிர்ஷ்டம் வென்றாலும்
திசைஅஷ்டம் சென்றாலும் பேரதிர்ஷ்டம் வென்றாலும்
தீஷதனை துதித்து இருப்பேன்.......நான்
தீஷதனை துதித்து இருப்பேன்

எயிற்றலும் பயிற்றலும் நின் அருளாலே
பூற்றலும் கீற்றலும் நின் பொருளாலே 
எயிற்றலும் பயிற்றலும் நின் அருளாலே
பூற்றலும் கீற்றலும் நின் பொருளாலே
ஏற்றலும் போற்றலும்  நின் இறையாலே
மாற்றலும் நூற்றலும் நின் மறையாலே
ஏற்றலும் போற்றலும்  நின் இறையாலே
மாற்றலும் நூற்றலும் நின் மறையாலே

இஷ்டம் என்றாலும் கஷ்டம் வந்தாலும் 
இன்முகனை நினைத்து இருப்பேன்
இன்ப இஷ்டமென்றாலும் துன்ப கஷ்டமந்தாலும்
இன்முகனை நினைத்து இருப்பேன்
அஷ்டம் சென்றாலும் அதிர்ஷ்டம் வென்றாலும்
திசைஅஷ்டம் சென்றாலும் பேரதிர்ஷ்டம் வென்றாலும்
தீஷதனை துதித்து இருப்பேன்.......நான்
தீஷதனை துதித்து இருப்பேன்

Tuesday 11 February 2020

முருகன் மணி மாலைகள் 4


கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
வர்ணனை தந்தனை வடிவேலனை  செய் வாழ்த்தினை
வர்ணனை தந்தனை வடிவேலனை  செய் வாழ்த்தினை

அழகனை அமுதனை விளித்தனை தமிழ் இனித்தனை
வேலனை சிங்காரவேலனை நினைத்தனை நிம்மதி நிலைத்தனை
தாமரைபூத்தனை தத்திதவழ்ந்தனை ஆட்டத்தினை ஆடி திளைத்தனை
குமரனை முத்துக்குமரனை  ஜெபித்தனை அடை ஜெயத்தினை

கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
வர்ணனை தந்தனை வடிவேலனை  செய் வாழ்த்தினை
வர்ணனை தந்தனை வடிவேலனை  செய் வாழ்த்தினை

சூழ்ச்சிதனை வெல்லத்தனை மனவுறுதியினை தேக பலத்தினை
தண்டாயுதனை நாடிதனை  விருப்பந்தனை கேள் கிடைத்தனை
அலங்காரத்தினை திருக்கோலத்தினை காணத்தனை வேணும் கொடுப்பினை
மலையினை மருதமலையினை சுற்றினை சுகம் சூழ்ந்தனை இன்பம் நிறைந்தனை

கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
வர்ணனை தந்தனை வடிவேலனை  செய் வாழ்த்தினை
வர்ணனை தந்தனை வடிவேலனை  செய் வாழ்த்தினை

Monday 10 February 2020

மெட்டும்.... பாட்டும்

வணக்கம் நண்பர்களே
"காற்று வாங்க போனேன்"
என்ற பழைய பாடலுக்கு 
புதிய வரிகளை தந்துள்ளேன்...
காவியக்கவிஞர் வாலியின் 
வரிகளுக்கு ஈடு இணை இல்லை...
இருந்தாலும் 
பழைய பாடல்கள்
புதிய வரிகள்
அழகு தமிழ் பயிற்சி
இந்த புதிய முயற்சி...
பாடி... படிக்க... ரசிக்க...இதோ...
...

Saturday 8 February 2020

முருகன் மணி மாலைகள் 3


கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
கீர்த்தனை தந்தனை வேலனை  செய் வந்தனை
கீர்த்தனை தந்தனை வேலனை  செய் வந்தனை

பரனை குருபரனை குமரகுருபரனை பண் ஆராதனை
பவனை சரவணபவனை யோசனை தரும் செல்வம்தனை
நெற்றிதனை நெஞ்சுதனை கரந்தனை இடு திருநீறுனை
அத்தனைவினை அழித்தனை பக்தனை அது காத்தனை

கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
கீர்த்தனை தந்தனை வேலனை  செய் வந்தனை
கீர்த்தனை தந்தனை வேலனை  செய் வந்தனை

உள்ளந்தனை வைத்தணை ஷடாக்ஷரனை படி கவசந்தனை
கேயனை காங்கேயனை கண்டுதனை பெறு ஞானந்தனை
பாலனை சக்திபாலனை  அமுதனை தமிழமுதனை வை புலம்தனை
பழனிதனை பவனிதனை பார்த்தனை வரும் யோகந்தனை பெரும் புகழ்தனை

கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
கீர்த்தனை தந்தனை வேலனை  செய் வந்தனை
கீர்த்தனை தந்தனை வேலனை  செய் வந்தனை

Thursday 6 February 2020

முருகன் மணி மாலைகள் 2

அன்பர்கள் அனைவருக்கும் 
இனிய வணக்கம்,
முருகன் மணி மாலைகள் 
எம்பெருமான்
முருகப்பெருமான் 
புகழ் பாடும் கவி மாலைகள்...
பார்க்க... படிக்க... ரசிக்க... இதோ...

கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
நற்பண்னை தந்தனை குகன்தனை  செய் நவில்ந்தனை
நற்பண்னை தந்தனை குகன்தனை  செய் நவில்ந்தனை

எத்தனை வல்வினை செய்வினை வர நிந்தனை
நினை நிமலனை முருகனை தீரும் வேதனை
வேண்டினை வேலனை வந்தனை நல் இன்பந்தனை
வாஞ்சனை பிராத்தனை வடிவேலனை பெறு வரந்தனை

கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
நற்பண்னை தந்தனை குகன்தனை  செய் நவில்ந்தனை
நற்பண்னை தந்தனை குகன்தனை  செய் நவில்ந்தனை

காஞ்சனை நிறத்தனை கார்த்திகேயனை புகழ்ந்தனை பேறு கல்விதனை
மனந்தனை மலர்ந்தனை மால்மருகனை துதிப்போர் மகிழ்ந்தனை
அகந்தனை திறந்தனை அழகனை அர்ச்சனை தரு அரியாசனை
முருகனை ஆறுமுகந்தனை தரிசனை கிட்டும் நாளும் நலந்தனை வாழ்வில் வளந்தனை

கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
கற்பனை தந்தனை கந்தனை செய் சிந்தனை
நற்பண்னை தந்தனை குகன்தனை  செய் நவில்ந்தனை
நற்பண்னை தந்தனை குகன்தனை  செய் நவில்ந்தனை

🙏🌼🌺🏵️🌻சக்திவேல்🌻🏵️🌺🌼🙏

Tuesday 4 February 2020

முருகன் மணி மாலைகள்

அன்பர்கள் அனைவருக்கும் 
இனிய வணக்கம்,
முருகன் மணி மாலைகள் 
எம்பெருமான் 
முருகப்பெருமான் 
புகழ் பாடும் கவி மாலைகள்...
பார்க்க... படிக்க... ரசிக்க... இதோ...
குறிஞ்சியிலே கொஞ்சும் குலாவும் அலையலையாய் மலைகள்
குன்றிலே அவ்வெழில் மிஞ்சும்  அழகழகாய் குமரன் சிலைகள்....
ஞாயிறு தரும் நாளும் காலை மாலை வேளைகள்
ஞானருள் பெற பாடுவோம் முருகன் மணி மாலைகள்.....

இன்பாம்பிகை இருள்நீக்கிஸ்வரர் ஈன்ற இறைமகனே
இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் தருவோனே இளமுகனே...
நான்முகனும் முக்கண்ணனும்  வேதப்பொருள் பெற்ற திருகுகனே
தேவதை தெய்வானை வனமலர் வள்ளி தேவியர் தேடிய  சூடிய சண்முகனே...

ஆனைமுகனோடு அண்டமெல்லாம் ஓடியது ஆடியது ஆறுமுகம்
ஆயுதங்கள் ஏந்தி அசுரர் படை தாக்கியது நூறு முகம்...
அன்பர்க்கு பண்பர்க்கு நண்பர்க்கு  காட்டுவது திருமுகம்
அழகு அள்ளும் காண்போர் உள்ளம் துள்ளும் உன்முகம் இன்முகம்...

நற்றமிழர் காடு திருத்தி பாடுபட்டு செய்தது கழனி
நாரதர் கலகத்திலே உலகத்திலே வேலன் உலவியது பழனி...
நாடி தேடி ஓடி வரும் பக்தர்க்கு என்றுமே தருவாய் பலம் நீ
நிமலா நல்லோர் நம்பினோர் பிறவிக்கடல் கடக்குதவும்  கலம் நீ...

திருக்கார்த்திகை பெண்களோடு விளையாடி வளர்ந்தது குறும்பு பாலன்
திரண்ட தோள் கொண்டு சூரனை வதைத்தது செந்தூர் வேலன்...
ஆண்டவரும் அகத்தியரும் தொடங்கிய முத்தமிழ் சங்க தலைவன்
ஔவையோடும் கிரனோடும் விளையாடிய வேலவன் தமிழ் புலவன்...

காவடி வைத்து கட்ட வேண்டும் வண்ணமிகு மயிலிறகு
கந்தனை நினைத்து போற்றி பாடி உளமுருகு மனமுருகு....
திருவடி தரிசனம் கிட்ட வேண்டும் வாழ்த்தி வணங்கி தாழ் மருகு
தினமும் நலம் காக்கும் பால முருகு.... வருக வந்து தீந்தமிழ் பருகு...

வண்ண வண்ண பூக்கள் பறித்து சூடுவோம் அழகனுக்கு மலர் மாலைகள்...
அமிழ்து தமிழ் பாக்கள் பறித்து பாடுவோம் முருகன் மணி மாலைகள்...

இன்னும் பூக்கள் பூக்கும்...
மின்னும் பாக்கள் பறிக்கும்...

Friday 31 January 2020

பக்தி விளையாட்டு

அன்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம்.....
குரும்பபாளையம் அருள்மிகு ஆதிசக்தி தலைக்காட்டு மாரியம்மன் திருக்கோயில் நோம்பி திருவிழாவை கவிதை நடையில்....
பார்க்க... படிக்க... ரசிக்க... இதோ