செவ்வாய், 31 டிசம்பர், 2019

பக்தி விளையாட்டு 6


மாதேவியின் கண்களுக்கு காதுகளுக்கு குளிர்ச்சி
மகளிர் சேர்ந்து செய்யும் திருவிளக்கு பூசை நிகழ்ச்சி...
அகிலாண்டேஸ்வரியை போற்றி போற்றி விளக்கு ஒளியில் புகழ்ச்சி
அக்கம் பக்கமெல்லாம் கேட்க கேட்க பக்தி ஒலியில் புரட்சி....

நண்பர்கள் குழு முழங்குவது திடுமம் இசை போட்டு...
அன்பர்கள் மட்டுமல்ல 
ஆகாயமே அதிரந்தது  தினமும் ஓசை கேட்டு....
ஆண்டவனும் ஆனந்தமாய் ஆடினான் 
மேலோகத்தில் காலில் சலங்கை இட்டு....
அம்பிகையும் அகமகிழ்ந்து ஊஞ்சலாடினாள்  
பூலோகத்தில் காதல் வயப்பட்டு....

ரசித்து பார்க்க பாரம்பரிய ஒயிலாட்டம்
ரசிகன் சொன்னான் இதை விட என்ன பெரிய மயிலாட்டம்....

தெருவேங்கும் தொங்கும் பொம்மை கடைகள்
ஊரேங்கும் வாங்கி சுற்றும் சிறுவர் படைகள்....

விழாக்குழு நடத்தும் நாளும் கலை நிகழ்ச்சி
விருந்தினரும் பெறனும் மன மகிழ்ச்சி....

அகில நாயகி தாயே ஆதிசக்தி தலைக்காட்டு....
ஆடுவோமே உன்னோடு பக்தி விளையாட்டு....

புதன், 25 டிசம்பர், 2019

பக்தி விளையாட்டு 5

தேவி மனம் மகிழணும் எக்காலமும்
தினசரி பூசைகள் நடக்கும் முக்காலமும்....
அம்பிகை திருமேனி நாளும் குளிரணும்
பன்னீரில், இளநீரில், நன்னீரில் நனையனும்....
அலங்காரி அங்கமெல்லாம் ஜொலிக்கும் தங்கமாக
அன்றாடம் சாத்து சந்தணம்,மஞ்சள்,குங்கும காப்பாக....
அம்மனுக்கு பூ வைத்து, பொட்டு வைத்து
மையிட்டு, மாலையிட்டு
வண்ண வண்ண பட்டு உடுத்தி
நாளும் பொழுதும் திருமேனியை அழகு படுத்தி....
தலை அணிகள், முகத்தணிகள்
காதணிகள், கழுத்தணிகள்
கையணிகள், இடையணிகள்
காலணிகள், விரலணிகள்
அம்மிணியின் உச்சி முதல் பாதம் வரை
உடம்பெல்லாம் மின்னுது பொன்நகையில்.....
என்றாலும் மனது மயங்குவதோ
சுந்தரி உனது புன்னகையில்.....
அன்னைக்கு அமுது படைத்து, தேங்காய் உடைத்து, 
கற்பூர, தீப, தூப ஆராதனைகள்
சுற்றும் மணியோசை கேட்க சிறப்பு பூசைகள்
சுற்றமும் கண்டு களிக்கவே மனதில் ஆசைகள்.....

அகில நாயகி தாயே ஆதிசக்தி தலைக்காட்டு.....
ஆடுவோமே உன்னோடு பக்தி விளையாட்டு.....
......சக்திவேல்

வியாழன், 12 டிசம்பர், 2019

பக்தி விளையாட்டு 3



கோயிலுக்கே குடிபெயர்ந்த பூசாரிகள் கட்ட கங்கணம்....
பால், பழம் தவிற உணவின்றி விரதம் இனி எட்டு நாள் எங்கணம்....
தாயே உனக்கு பூசைகள், சேவைகள் செய வருமே சக்தி அங்கணம்....
அக்கம் பக்கம் நாடி
காட்டிலும் மேட்டிலும் ஓடி
அரசமரம் ஆலமரம் தேடி
கொம்போடு கிளை கண்டு வெட்டு....
ஆளுயுர நிறுத்த அழகுற செதுக்க
மஞ்சள் பூசி வைப்போம் குங்கும பொட்டு....
பூமாலை சூடி, வேப்பிலை கட்ட
அம்மன் முன் பூசித்து கொண்டாடி கம்பம் போட்டு....
அதில் அக்னி வளர்த்த  பூச்சட்டி வைக்க
பெண்கள் கூட்டம்கூடி குலவையிலே உனக்கு பாட்டு.....
அகிலநாயகி தாயே ஆதிசக்தி தலைக்காட்டு....
ஆடுவோமே உன்னோடு பக்தி விளையாட்டு....

வெள்ளி, 6 டிசம்பர், 2019

பக்தி விளையாட்டு 1



பக்தி
விளையாட்டு.....

அம்மா மாரியம்மா 
படிக்கிறேன் உனக்கு பாட்டு....
அன்பும் ஆசியும் பெற
பணிகிறேன் மலர் பாதம் தொட்டு....

உலகம் காக்கும் தாயே 
எங்கள் ஆதிசக்தி மாரியம்மா....
உள்ளம் முழுதும் நீயே 
என்றும் உன் அன்பு   மாறாதம்மா....
அகிலநாயகி தாயே ஆதிசக்தி தலைக்காட்டு....
ஆடுவோமே உன்னோடு பக்தி விளையாட்டு....

...................... சக்திவேல்

புதன், 4 டிசம்பர், 2019

காட்டு பூக்கள் 4

காட்டு பூக்கள்

அன்று
நீ எனக்கு
யாராயிருந்தால் என்ன......

இன்றும்
இனி என்றும்
யாரோ என எண்ண......

விடியும் முன் எழுந்து
விரைந்து உன் முன் வந்து
பார்க்க.... சிரிக்க.... ஒரு முறை
தேடினேன் ஆயிரம் வழி முறை.....

பழசையல்லாம் இனி விட்டுத்தள்ளு......
இன்னொருமுறை பல் இளித்தால் என்னை சுட்டுத்தள்ளு......

இன்னும் பூக்கும்
சக்திவேல்

புதன், 27 நவம்பர், 2019

ஆசை பைத்தியங்கள்


ஆசை பைத்தியங்கள்

வானமும் சிரித்தது 
நிலவை கொண்டு....
பூமியும் அழுதது
வெறும் நிழலை கொண்டு....

தெய்வம் வந்ததா
தேவதை உன்னை தந்ததா....

பூமிக்கென்று
ஒரு நிலவாய்....
பூமகள் பெற்றுத்தந்த
வெண்ணிலவாய்....
பிரம்மன் படைத்திட்ட
பெண்ணிலவாய்....

......................... சக்திவேல் 

காட்டு பூக்கள்

காட்டு பூக்கள்

காட்டு பூக்கள்

பிணம் தின்னும்
கழுகுகள் கூட....
மனம் தின்னும்
கனவுகள் தேட...

அழகே நீ யாரடி.....
மனம் தின்னும் கனவா
பிணம் தின்னும் கழுகா...

............... இன்னும் பூக்கும்
................ சக்திவேல்

புதன், 6 நவம்பர், 2019

ஆசை பைத்தியங்கள்

ஆசை பைத்தியங்கள்

அடுத்த ஜென்மத்தில்
நான்................... நீயாக
நீ.......................... நானாக
நிறைய பழி வாங்க வேண்டியிருக்கிறது
நானாகும் உன்னை.......

.............. சக்திவேல்


வெள்ளி, 25 அக்டோபர், 2019

My Ooty Trip 2017 ஊட்டி ஒரு ஒளியோவியம்


Ooty - Ootacamund in Tamilnadu is India's best Hill Station Tourist Spot. Cool weather,Immense Scenaries with Lakes,Waterfalls, Large Variety of Flowers and Special Botanical Rose Garden.

மலைகளின் ராணி ஊட்டி தமிழ்நாட்டின்/இந்தியாவின் மிகச்சிறந்த சுற்றுலா தளம்.


வெள்ளி, 18 அக்டோபர், 2019

அன்பு அம்மா


அன்பு அம்மா

அன்பு தோழனே
அப்பாவாகிவிடு....

தாத்தா பாட்டியாக
பெற்றோர் மாறவா....
வம்சம் அழியாமல் தலைக்கவா....
ஆண்மையின் நிருபணமா....
மலடல்ல மனைவி எனக்காட்டவா....
இல்லவே இல்லை!!!!


உன்னால்
ஒரு அன்பு மிக்க அம்மா
உருவாக மட்டுமே....

அன்பு தோழனே
அப்பாவாகிவிடு....

சக்திவேல்


கல்யாண மாலை வாழ்த்து


🌺கல்யாண மாலை🌺 வாழ்த்து🌺

மலர்கள் மட்டுமே சேர்வது பூமாலை
மனங்களும் கூடச் சேர்வது கல்யாண மாலை
மணமக்களே நீங்கள் மாற்றினது மாலைகளை மட்டுமல்ல
உங்கள் மனங்களையும் சேர்த்து தான்....

கல்யாண பட்டம் தந்து விட்டார்கள்
இனி காதல் பாடம் நீங்கள் படிக்கலாம்
பட்டம் தந்து படிக்க சொல்லும்
நம் பண்பாடு பெருமைக்குரியது போற்றுதற்குரியது....

தோழனே!
அருவிகள் தேடாத மலைத்தொடர் நீ....
இயற்கை இணைக்கிறது
உன்னுடன் ஒரு நயாகராவை....
நனைந்துகொள்....

உன்னில் ஒரு புதுவசந்தம் ஆரம்பம்
வெட்கப்படும் வெண்புறாவோடு
புது வானில் சிறகுகள் பறக்கட்டும்

ஏற்கனவே உங்கள் நட்பு பக்கங்கள்
நிறைந்து வழிகின்றன....
அது போல இனி குடும்ப பக்கங்களும்
நிரம்பி வழியட்டும்....

தோழனே! தோழியே! இனி நீங்கள்
பூக்களும் வாசனையும் போல...
புல்வெளியும் பச்சையும் போல...
உள்ளங்களையும் ரேகையும் போல...
மோனலிசாவும் புன்னகையும் போல...
இணைந்து,

நாளும் நலமுடன், மனம் மகிழ்வுடன்,
பொங்கும் புகழுடன், புன்னகை முகமுடன்,
இறைவன் அருளுடன், இனியாவும் இனிதுடன்,

நீங்கள் வாழ்க வளமுடன்.....

சக்திவேல்

ஆசை பைத்தியங்கள் கவிதைகள் குறும்படம்


வெள்ளி, 11 அக்டோபர், 2019

வியாழன், 10 அக்டோபர், 2019

காட்டு பூக்கள்

காட்டு பூக்கள் தலைப்பில் எழுதிய கவிதைகள் மிகவும் குறைவு.... ஆனால் ஒவ்வொன்றும் ஆழமான அழுத்தமான கற்பனைகள் கவிதைகள்...










ஆசை பைத்தியங்கள்

என்னில்
தோன்றி மறைந்த
எண்ணங்களும்
கற்பனைகளும் பல பல
இங்கே மின்னுவது ஒரு சில.....

ஆசை பைத்தியங்கள் 
என்ற தலைப்பில்
எழுதிய கவிதைகள்...