Tuesday 31 December 2019

பக்தி விளையாட்டு 6


மாதேவியின் கண்களுக்கு காதுகளுக்கு குளிர்ச்சி
மகளிர் சேர்ந்து செய்யும் திருவிளக்கு பூசை நிகழ்ச்சி...
அகிலாண்டேஸ்வரியை போற்றி போற்றி விளக்கு ஒளியில் புகழ்ச்சி
அக்கம் பக்கமெல்லாம் கேட்க கேட்க பக்தி ஒலியில் புரட்சி....

நண்பர்கள் குழு முழங்குவது திடுமம் இசை போட்டு...
அன்பர்கள் மட்டுமல்ல 
ஆகாயமே அதிரந்தது  தினமும் ஓசை கேட்டு....
ஆண்டவனும் ஆனந்தமாய் ஆடினான் 
மேலோகத்தில் காலில் சலங்கை இட்டு....
அம்பிகையும் அகமகிழ்ந்து ஊஞ்சலாடினாள்  
பூலோகத்தில் காதல் வயப்பட்டு....

ரசித்து பார்க்க பாரம்பரிய ஒயிலாட்டம்
ரசிகன் சொன்னான் இதை விட என்ன பெரிய மயிலாட்டம்....

தெருவேங்கும் தொங்கும் பொம்மை கடைகள்
ஊரேங்கும் வாங்கி சுற்றும் சிறுவர் படைகள்....

விழாக்குழு நடத்தும் நாளும் கலை நிகழ்ச்சி
விருந்தினரும் பெறனும் மன மகிழ்ச்சி....

அகில நாயகி தாயே ஆதிசக்தி தலைக்காட்டு....
ஆடுவோமே உன்னோடு பக்தி விளையாட்டு....

Wednesday 25 December 2019

பக்தி விளையாட்டு 5

தேவி மனம் மகிழணும் எக்காலமும்
தினசரி பூசைகள் நடக்கும் முக்காலமும்....
அம்பிகை திருமேனி நாளும் குளிரணும்
பன்னீரில், இளநீரில், நன்னீரில் நனையனும்....
அலங்காரி அங்கமெல்லாம் ஜொலிக்கும் தங்கமாக
அன்றாடம் சாத்து சந்தணம்,மஞ்சள்,குங்கும காப்பாக....
அம்மனுக்கு பூ வைத்து, பொட்டு வைத்து
மையிட்டு, மாலையிட்டு
வண்ண வண்ண பட்டு உடுத்தி
நாளும் பொழுதும் திருமேனியை அழகு படுத்தி....
தலை அணிகள், முகத்தணிகள்
காதணிகள், கழுத்தணிகள்
கையணிகள், இடையணிகள்
காலணிகள், விரலணிகள்
அம்மிணியின் உச்சி முதல் பாதம் வரை
உடம்பெல்லாம் மின்னுது பொன்நகையில்.....
என்றாலும் மனது மயங்குவதோ
சுந்தரி உனது புன்னகையில்.....
அன்னைக்கு அமுது படைத்து, தேங்காய் உடைத்து, 
கற்பூர, தீப, தூப ஆராதனைகள்
சுற்றும் மணியோசை கேட்க சிறப்பு பூசைகள்
சுற்றமும் கண்டு களிக்கவே மனதில் ஆசைகள்.....

அகில நாயகி தாயே ஆதிசக்தி தலைக்காட்டு.....
ஆடுவோமே உன்னோடு பக்தி விளையாட்டு.....
......சக்திவேல்

Thursday 12 December 2019

பக்தி விளையாட்டு 3



கோயிலுக்கே குடிபெயர்ந்த பூசாரிகள் கட்ட கங்கணம்....
பால், பழம் தவிற உணவின்றி விரதம் இனி எட்டு நாள் எங்கணம்....
தாயே உனக்கு பூசைகள், சேவைகள் செய வருமே சக்தி அங்கணம்....
அக்கம் பக்கம் நாடி
காட்டிலும் மேட்டிலும் ஓடி
அரசமரம் ஆலமரம் தேடி
கொம்போடு கிளை கண்டு வெட்டு....
ஆளுயுர நிறுத்த அழகுற செதுக்க
மஞ்சள் பூசி வைப்போம் குங்கும பொட்டு....
பூமாலை சூடி, வேப்பிலை கட்ட
அம்மன் முன் பூசித்து கொண்டாடி கம்பம் போட்டு....
அதில் அக்னி வளர்த்த  பூச்சட்டி வைக்க
பெண்கள் கூட்டம்கூடி குலவையிலே உனக்கு பாட்டு.....
அகிலநாயகி தாயே ஆதிசக்தி தலைக்காட்டு....
ஆடுவோமே உன்னோடு பக்தி விளையாட்டு....

Friday 6 December 2019

பக்தி விளையாட்டு 1



பக்தி
விளையாட்டு.....

அம்மா மாரியம்மா 
படிக்கிறேன் உனக்கு பாட்டு....
அன்பும் ஆசியும் பெற
பணிகிறேன் மலர் பாதம் தொட்டு....

உலகம் காக்கும் தாயே 
எங்கள் ஆதிசக்தி மாரியம்மா....
உள்ளம் முழுதும் நீயே 
என்றும் உன் அன்பு   மாறாதம்மா....
அகிலநாயகி தாயே ஆதிசக்தி தலைக்காட்டு....
ஆடுவோமே உன்னோடு பக்தி விளையாட்டு....

...................... சக்திவேல்

Wednesday 4 December 2019

காட்டு பூக்கள் 4

காட்டு பூக்கள்

அன்று
நீ எனக்கு
யாராயிருந்தால் என்ன......

இன்றும்
இனி என்றும்
யாரோ என எண்ண......

விடியும் முன் எழுந்து
விரைந்து உன் முன் வந்து
பார்க்க.... சிரிக்க.... ஒரு முறை
தேடினேன் ஆயிரம் வழி முறை.....

பழசையல்லாம் இனி விட்டுத்தள்ளு......
இன்னொருமுறை பல் இளித்தால் என்னை சுட்டுத்தள்ளு......

இன்னும் பூக்கும்
சக்திவேல்