சனி, 25 ஜனவரி, 2020

பக்தி விளையாட்டு

மறுநாள் அற்புதை மனம் குளிர குளிர மகா அபிஷேகங்கள்
மங்கா பால் முகம் ஒளிர ஒளிர பலப்பல தீப ஆராதனைகள்...
பொன் பொருள் கடலென குவிந்தது, மக்கள் மனமுவந்து உபப்பிரதானம்
அன்பர்கள் ஆயிரமாயிரம் ஆயினும் அனைவருக்கும் அன்னதானம்...

விழா சிறப்பிக்க உழைத்தவர்க்கு உளமாற வாழ்த்தி பாராட்டு
உற்றார் உறவினர் நண்பர்களுடன் ஊரேங்கும் மஞ்சள் நீராட்டு...
நோம்பியை வெகுவிமரிசையாக கொண்டாடுவது எங்கள் வாடிக்கை
விரும்பியே விடுவோம் நாங்கள் வண்ணமயமான வாணவேடிக்கை...

இப்படியாக இத்திருவிழா இந்நாளுடன் பெற்றது இனிதே நிறைவு
இதை எண்ணி எண்ணியே எந்நாளும் வற்றாது அடைவோம் மனநிறைவு...
காண கிடைக்காத காட்சிகள் அத்தனையும் கண்ணியம்
கண்டு களிக்க செய்திருக்கணும் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம்...

மாரியே நீ தந்த வரம் பெற்று, உன்னால் ஆசிர்வதிக்கபட்டு
என்னுள் எண்ணம் எழுத்து எல்லாம் தாயே உன் வயப்பட்டு...
மனதில் மலர்ந்தது, கவிதையில் கனிந்தது இந்த பக்தி விளையாட்டு
மண்ணில் எங்கும் என்றும் எல்லாம் உன் சக்தி விளையாட்டு...

அகில நாயகி தாயே ஆதிசக்தி தலைக்காட்டு
ஆடுவோமே உன்னோடு பக்தி விளையாட்டு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக