சனி, 25 ஜனவரி, 2020

பக்தி விளையாட்டு

மாவிளக்கு ஏந்தி தேவதைகள் திருஉலா இன்று ஊருக்குள்
மாநிலமெங்கும் தேட இதுபோல் திருவிழா இல்லை பாருக்குள்....

யோகம் விநியோகம் அபிஷேக பிரசாத பட்சணம்
வாங்கி பெறுவோம் வாழ்வில் சர்வ லட்சணம்...
யாரும்யாசிக்க பவதிஅங்கைகள் தரும் கோடி வரம் தட்சணம்
யோசிக்காமல் யுவதிமங்கைகள் ஓடி வந்து அங்கப்பிரதட்சணம்...

கரகம் எடுத்து ஆடியே வந்தனர் பூசாரிகள்
நீர் ஊற்றி கூடவே வந்தனர் பாதசாரிகள்...













நடங்கள் நடங்கள் என்றே நகர்ந்தது மக்கள் வழிதடம்
நாங்கள் தலையில் தாங்கி வந்தது அம்மனுக்கு பால் குடம்...

காத்து பார்த்து வளர்த்து கையில் ஏந்தி வந்தோம் முளைப்பாரி
களைப்பு நீங்க  தாயே நீயும் வந்து அமர்ந்து சற்று இளைப்பாறி...

அம்மன் பார்வை பட விலகும் எப்பேர்ப்பட்ட தோஷங்களும்
ஆயுளுக்கும் இனி பிறக்கும் எண்ணற்ற சந்தோஷங்களும்...

மூவுலகிலும் மின்னுவது முக்கண்ணி மூக்குத்தி
பூவுலகிலும் பண்ணுவது பிராத்தனை அலகு குத்தி...

கம்பம் சுற்றி ஓடியாடி பூசாரிகள் பாடியது பாட்டை
பக்தியில் பிறந்த சக்தியில் விளையாடியது சாட்டை...

அம்மா ஆத்தா தாயே மகமாயி மாரியம்மா காதுகளில் ரீங்காரம்
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்ஆதிபராசக்தி ஒலிக்கும் ஓங்காரம்..

ஒருவழியாக ஓடியாடி விளையாடி விளையாடி ஓய்ந்தனர்
ஓய்ந்தவரெல்லாம் கம்பத்தின் மேல் பாய்ந்தனர்...
வரூடா வருடம் வரலாமென வாக்களித்து வழியனுப்பினர்
அன்போடு அரவணைத்து அக்கம்பத்தை ஆற்றில் அனுப்பினர்...

அகிலநாயகி தாயே ஆதிசக்தி தலைக்காட்டு
ஆடுவோமே உன்னோடு பக்தி விளையாட்டு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக