அன்பர்கள் அனைவருக்கும்
இனிய வணக்கம்,
முருகன் மணி மாலைகள்
எம்பெருமான்
முருகப்பெருமான்
புகழ் பாடும் கவி மாலைகள்...
பார்க்க... படிக்க... ரசிக்க... இதோ...
குறிஞ்சியிலே கொஞ்சும் குலாவும் அலையலையாய் மலைகள்
குன்றிலே அவ்வெழில் மிஞ்சும் அழகழகாய் குமரன் சிலைகள்....
ஞாயிறு தரும் நாளும் காலை மாலை வேளைகள்
ஞானருள் பெற பாடுவோம் முருகன் மணி மாலைகள்.....
இன்பாம்பிகை இருள்நீக்கிஸ்வரர் ஈன்ற இறைமகனே
இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் தருவோனே இளமுகனே...
நான்முகனும் முக்கண்ணனும் வேதப்பொருள் பெற்ற திருகுகனே
தேவதை தெய்வானை வனமலர் வள்ளி தேவியர் தேடிய சூடிய சண்முகனே...
ஆனைமுகனோடு அண்டமெல்லாம் ஓடியது ஆடியது ஆறுமுகம்
ஆயுதங்கள் ஏந்தி அசுரர் படை தாக்கியது நூறு முகம்...
அன்பர்க்கு பண்பர்க்கு நண்பர்க்கு காட்டுவது திருமுகம்
அழகு அள்ளும் காண்போர் உள்ளம் துள்ளும் உன்முகம் இன்முகம்...
நற்றமிழர் காடு திருத்தி பாடுபட்டு செய்தது கழனி
நாரதர் கலகத்திலே உலகத்திலே வேலன் உலவியது பழனி...
நாடி தேடி ஓடி வரும் பக்தர்க்கு என்றுமே தருவாய் பலம் நீ
நிமலா நல்லோர் நம்பினோர் பிறவிக்கடல் கடக்குதவும் கலம் நீ...
திருக்கார்த்திகை பெண்களோடு விளையாடி வளர்ந்தது குறும்பு பாலன்
திரண்ட தோள் கொண்டு சூரனை வதைத்தது செந்தூர் வேலன்...
ஆண்டவரும் அகத்தியரும் தொடங்கிய முத்தமிழ் சங்க தலைவன்
ஔவையோடும் கிரனோடும் விளையாடிய வேலவன் தமிழ் புலவன்...
காவடி வைத்து கட்ட வேண்டும் வண்ணமிகு மயிலிறகு
கந்தனை நினைத்து போற்றி பாடி உளமுருகு மனமுருகு....
திருவடி தரிசனம் கிட்ட வேண்டும் வாழ்த்தி வணங்கி தாழ் மருகு
தினமும் நலம் காக்கும் பால முருகு.... வருக வந்து தீந்தமிழ் பருகு...
வண்ண வண்ண பூக்கள் பறித்து சூடுவோம் அழகனுக்கு மலர் மாலைகள்...
அமிழ்து தமிழ் பாக்கள் பறித்து பாடுவோம் முருகன் மணி மாலைகள்...
இன்னும் பூக்கள் பூக்கும்...
மின்னும் பாக்கள் பறிக்கும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக