வெள்ளி, 19 ஜூன், 2020

மெட்டும் பாட்டும் 3

மழைமேகம் கூடுது ஓடுது காற்றில்ஆடுது
வானில் வண்ணக் கோலம் போடுது
வெண்மேகம் முட்டுது மோதுது சேர்ந்தேநெருங்குது
மோகம் தீர்க்கும் காலம் தேடுது...

தூறல் தான் வந்தாலும் துள்ளும் மயில் கூட்டம்
சாரல் பட்டாலே பூவெல்லாம் போடும் ஆட்டம் பாட்டம்...

மழைமேகம் கூடுது ஓடுது காற்றில்ஆடுது
வானில் வண்ணக் கோலம் போடுது
வெண்மேகம் முட்டுது மோதுது சேர்ந்தேநெருங்குது
மோகம் தீர்க்கும் காலம் தேடுது...

ஒரு மின்னல் கீற்று ஒளி வீசும்
அதன் பின்னால் கத்தும் இடி பேசும்
நீர் போகும் இடமெல்லாம் புல் முளைக்கும்
கல்லுக்குள் விழுந்தாலும் உயிர் செழிக்கும்...

மழையே நீ எட்டி பார்க்கும் பாலை
மாறாதோ மலர் பறிக்கும் சோலை...

மண்வாசம் பூவாசம் மணம்வீசும்
நன் நாளே நீ வந்தாலே
இனி வாழ்வில் அந்நாள் திருநாள்...

மழைமேகம் கூடுது ஓடுது காற்றில்ஆடுது
வானில் வண்ணக் கோலம் போடுது
வெண்மேகம் முட்டுது மோதுது சேர்ந்தேநெருங்குது
மோகம் தீர்க்கும் காலம் தேடுது...

தூறல் தான் வந்தாலும் துள்ளும் மயில் கூட்டம்
சாரல் பட்டாலே பூவெல்லாம் போடும் ஆட்டம் பாட்டம்...

மழைமேகம் கூடுது ஓடுது காற்றில்ஆடுது
வானில் வண்ணக் கோலம் போடுது
வெண்மேகம் முட்டுது மோதுது சேர்ந்தேநெருங்குது
மோகம் தீர்க்கும் காலம் தேடுது...

நதி ஓடும் அழகில் மதி மயங்கும்
மாலை கதிரும் நிலவும் முகம் பார்க்கும்
நீர்க்கொட்டும் ஓசைகள் இசையாகும்
ஏர்ப்பிடிக்கும் உழவர்கள் மனம்மகிழும்...

ஆறேநீ காட்டில் மேட்டில் பிறந்து
அணையே உன் தொட்டில் விழுந்து தவழ்ந்து...

வான்ரசிக்கும கார்மேகம் உன்தேகம்
பூ மழையும் புயல் மழையும்
கடல் சேரும் உறவே இனிதே...

மழைமேகம் கூடுது ஓடுது காற்றில்ஆடுது
வானில் வண்ணக் கோலம் போடுது
வெண்மேகம் முட்டுது மோதுது சேர்ந்தேநெருங்குது
மோகம் தீர்க்கும் காலம் தேடுது...

தூறல் தான் வந்தாலும் துள்ளும் மயில் கூட்டம்
சாரல் பட்டாலே பூவெல்லாம் போடும் ஆட்டம் பாட்டம்...

மழைமேகம் கூடுது ஓடுது காற்றில்ஆடுது
வானில் வண்ணக் கோலம் போடுது
வெண்மேகம் முட்டுது மோதுது சேர்ந்தேநெருங்குது
மோகம் தீர்க்கும் காலம் தேடுது...

ஞாயிறு, 31 மே, 2020

மெட்டும் பாட்டும் 2

அழகே உன்னை காணவே அகிலம் முழுதும் தேடினேன்
அருகில் அமரக் கண்டதும் ஆனந்த மழையில் ஆடினேன்
செண்பகமும் உன்முகமும் அதிசய அற்புதங்கள்
செவ்வந்தியும் உன்முந்தியும் சேர்ந்தே அசையும் தென்றலில்

ம்ம்ம்....ஒ.....ஓ.....ஓ
லளலளலளா......லளலளலளா.....லளலளலளலலலலலளா.......
ம்ம்ம்....
கங்கை நதி புனிதத்தில் நீராட வரூவாயா
மங்கை என் மனத்தினை போராட விடுவாயா

நீர் நனைத்த பொன்னுடம்பை நான் அணைத்து துடைக்கட்டுமா
அங்கங்கள் அழகை சொல்ல சிற்பம் செதுக்கட்டும்மா

ஒ....மன்னா உந்தன் மார்பில் மயங்கி போகின்றேன்
தெளிந்த பின்னும் தயங்கி மீண்டும் மயங்க பார்க்கின்றேன்

அழகே உன்னை காணவே அகிலம் முழுதும் தேடினேன்
ஒ...அருகில் அமரக் கண்டதும் ஆனந்த மழையில் ஆடினேன்
செண்பகமும் உன்முகமும் அதிசய அற்புதங்கள்
ஒ...செவ்வந்தியும் உன்முந்தியும் சேர்ந்தே அசையும் தென்றலில்

அழகே உன்னை காணவே அகிலம் முழுதும் தேடினேன்
ஒ...அருகில் அமரக் கண்டதும் ஆனந்த மழையில் ஆடினேன்

ம்ம்ம்....புண்சிரிப்பும் கண் பறிக்கும் பூவிதழ்கள் கவர்ந்திழுக்கும்
கண்மணி உன் கார்குழலில் ஒளிந்து கொள்ளட்டுமா....ஆ

ஆ....ஆசைக்கு அறிவில்லை அதற்கும் ஓர் அளவில்லை
அளவில்லா ஆசை வைத்தேன் அதை நீ அறிவாயா

அக்கம் பக்கம் பார்த்து இடையே கிள்ளட்டும்மா
யாரோ என எண்ணி நீ என்னை கொஞ்சம் அடித்தால்லென்ன

ல ல லல… ல ல ல ல ல

அழகே உன்னை காணவே அகிலம் முழுதும் தேடினேன்

லல… ல ல ல லல… ல

ஒ...அருகில் அமரக் கண்டதும் ஆனந்த மழையில் ஆடினேன்

செண்பகமும் உன்முகமும் அதிசய அற்புதங்கள்
செவ்வந்தியும் உன்முந்தியும் சேர்ந்தே அசையும் தென்றலில்

அழகே உன்னை காணவே அகிலம் முழுதும் தேடினேன்
ஒ...அருகில் அமரக் கண்டதும் ஆனந்த மழையில் ஆடினேன்

வியாழன், 28 மே, 2020

சிவ சிந்தனை 3

அன்பே சிவமே ஆலகாலம் உண்ட நீலகண்டனே
அன்பே சிவமே ஆலகாலம் உண்ட நீலகண்டனே
வரம் தரும் சிவனருட்பா
வரம் தரும் சிவனருட்பா
வளமோடு கலைகளை தா
வளமோடு கலைகளை தா
சிவனை நாளும் நீ நாடு
சிவனை நாளும் நீ நாடு

சிவனை நாளும் நீ நாடு
சிவனை நாளும் நீ நாடு
அன்பே சிவமே ஆலகாலம் உண்ட நீலகண்டனே
அன்பே சிவமே ஆலகாலம் உண்ட நீலகண்டனே

நாட்டியத்தின் நாயகனே நாடறியும் உன் நடனம்
நாட்டியத்தின் நாயகனே நாடறியும் உன் நடனம்
திருச்சபைகள் கலை பயிலும்
உன்திருவடிகள் தினம் பணியும்
வான் மழையாய் பொழியும் இசையும் அதில்
உள்ளம் மகிழ்ந்து துள்ளும்
வான் மழையாய் பொழியும் இசையும் அதில்
உள்ளம் மகிழ்ந்து துள்ளும்
அன்பையெங்கும் அள்ளிக்கொடு
சிவனை நாளும் நீ நாடு

அன்பே சிவமே ஆலகாலம் உண்ட நீலகண்டனே

முத்தமிழும் முப்பொருளும் முக்கனியும் முத்தணியும்
முத்தமிழும் முப்பொருளும் முக்கனியும் முத்தணியும்
திருவருளும் தினமருளும்
காரிருளும் கலைந்தொளிரும்
என் தவமும் மனமும் சிவமுகமே
சிவனிருந்தால் துன்பமேது
என் தவமும் மனமும் சிவமுகமே
சிவனிருந்தால் துன்பமேது
எமன்வந்தும் பயந்தோட 
சிவனை நாளும் நீ நாடு....

அன்பே சிவமே ஆலகாலம் உண்ட நீலகண்டனே
வரம் தரும் சிவனருட்பா.....அருட்பா.
வளமோடு கலைகளை தா.....கலைகளை தா...
சிவனை நாளும் நீ நாடு
அன்பே சிவமே ஆலகாலம் உண்ட நீலகண்டனே

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

சிவ சிந்தனை


வணக்கம்
அன்பர்களே நண்பர்களே
சிவன் சிந்தனை 
என்ற தலைப்பில்
சில கவிதைகள் 
சில பாடல்கள்...
தாய் மூகாம்பிகை
திரைப்படத்தில் இடம்பெற்ற 
ஜனனி ஜனனி என்ற
தெய்விக பாடலுக்கு  
தேவன் ஆதிசிவனை போற்றி 
புதிய வரிகள்....
பாட... படிக்க... ரசிக்க... இதோ...

புதன், 4 மார்ச், 2020

முருகன் மணி மாலைகள் 6


தங்கமயில் வாகனன் முருகன்
தங்கமாக உடல் ஜொலிக்கும் அழகன்

அழகன், கருணை மயில் வாகனன்  முருகன்
கருணை பொழியும் கண்கள்கொண்ட கந்தன்

கந்தன், முத்து மயில் வாகனன் முருகன்
முத்து தெரிக்க சிரிக்கும் திருக்குமரன்

குமரன், பவள மயில் வாகனன் முருகன்
பவள வாய் புன்னகைக்கும் அமுதன்

அமுதன், மின்னும் மயில் வாகனன் முருகன்
கன்னம்  மின்னும்  கவரும் கதிர்காமன்

கதிர்காமன், பறக்கும் மயில் வாகனன் முருகன்
பரந்துவிரிந்த தோள்கள் கொண்ட பவனவன்

பவன், பன்னீர் மயில் வாகனன் முருகன்
பன்னிரு கரங்கள் காக்கும் கதிர்வேலவன்

வேலன், தேவ மயில் வாகனன் முருகன்
தேக்கு தேகம் தேரும்பெற்ற தென்முகன்

தென்முகன், நீல மயில் வாகனன் முருகன்
நீண்ட நெடுங்கால்கள் கொண்ட நிமலனவன்

நிமலன், அழகு மயில் வாகனன் முருகன்
அழகெல்லாம் குடி கொண்ட குகனவன்

குகன், வெள்ளி மயில் வாகனன் முருகன்
வள்ளி துள்ள கிள்ளியவன் கிழவன்

கிழவன், வண்ண மயில் வாகனன் முருகன்
வண்ண மலர்கள் சூடும் வடிவேலன்

வடிவேலன், அமிர்த மயில் வாகனன் முருகன்
பஞ்சாமிர்த சுவைக்கதரும் பழநி பிரீதன்

பிரீதன், பச்சை மயில் வாகனன் முருகன்
இச்சை தீர்த்து அருள்புரிவான் இன்முகன்

இன்முகன், ஞானமயில் வாகனன் முருகன்
ஞானியர் பற்றி சுற்றிவந்த செல்வனவன்

செல்வன், யோக மயில் வாகனன் முருகன்
யோகங்கள் கொட்டி கொட்டி தரும் சண்முகன்

சண்முகன், போக மயில் வாகனன் முருகன்
போகர் யோகர் சிலைவடித்த தண்டபாலன்

பாலன், தோகை மயில் வாகனன் முருகன்
தோளோடு தோள் கொடுக்கும் தோழனவன்

தோழன், வீர மயில் வாகனன் முருகன்
வீராதி வீரன் எங்கள் வேலனவன்

வேலன், வெற்றி மயில் வாகனன் முருகன்
வெற்றிகள் முரசு கொட்டும் வெற்றிவேலன்

வேலன், தமிழ் மயில் வாகனன் முருகன்
முத்தமிழோடு கலந்தாடும் விளையாடும் குருபரன்

பரன், ஏறும் மயில் வாகனன் முருகன்
நூறுமுகம் எடுத்து காட்டும் திருமுகன்

திருமுகன், இன்ப மயில் வாகனன் முருகன்
இன்பம் பொங்க இனிமை பெருக்கும் இளமுகன்
அன்புவாழ அகிலமாள ஆறுமுகன் ஏறிவரணும் தங்கமயில்