வியாழன், 26 செப்டம்பர், 2024

ஜெய் ஆஞ்சநேயா

ஜெய் ஆஞ்சநேயா

அஞ்சனை மைந்தா - ஜெய் ஆஞ்சநேயா
அசகாய சூரா - ஜெய் ஆஞ்சநேயா....

வாயு குமாரா - ஜெய் ஆஞ்சநேயா
வானர வீரா - ஜெய் ஆஞ்சநேயா....

ஸ்ரீராம பக்தா - ஜெய் ஆஞ்சநேயா
சீதா ராம பித்தா - ஜெய் ஆஞ்சநேயா....

விஸ்வரூப மாகி - ஜெய் ஆஞ்சநேயா
அலைகடல் தாண்டி - ஜெய் ஆஞ்சநேயா....

கணையாழி தந்தாய் - ஜெய் ஆஞ்சநேயா
சூடாமணி பெற்றாய் - ஜெய் ஆஞ்சநேயா....

சஞ்சீவி சுமந்தாய் - ஜெய் ஆஞ்சநேயா
சிரஞ்சீவி ஆனாய் - ஜெய் ஆஞ்சநேயா....

சொல்லின் செல்வமே - ஜெய் ஆஞ்சநேயா
செந்தூர திலகமே - ஜெய் ஆஞ்சநேயா

சக்திவேல்

சீதாராம துளிகள் 2


சீதாராம துளிகள் 2

அழகில் ஜானகி 
இதழில் பூ வழி.....
மிதிலை மான் விழி.......
அவளை ஏமாற்றியதோ
ஜாடையில்
மாய மான் மொழி.......

அசோக வனம்
அது ஆகியிருந்தது
ஒரு சோக வனம்........

அன்னை மைதிலி.......
மனம் அடைந்தது
அளவில்லா வலி.......
அன்றாடம் கலங்கியது 
அவள் மைவிழி.......

என்றும் இனிய
மங்கா மனையாழி.......
எனினும் இன்றோ
மணாளனை எண்ணி
ஏங்கும் மனநோயாளி போல.......

நல்ல வேளை
வழி காட்டியது
கணையாழி.......
அல்லல் களைய
அதை காட்டியது 
அனுமன் பலசாலி.......

ஆனந்த கண்ணரீல் 
சீதாவதி......
ஆயிரமாயிரம் நன்றிகள் 
அவ்வன்னையின் அன்பில்
அங்கு பெருகியது 
ஒரு மகா நதி.......
அதை பருகியது 
ஒரு மாருதி.......

பஜ்ரங்கி
பணிவுடன் அறிய 
ராமனிடம் போய் உரைய.....
பூமிஜா
சொன்ன ஓர் மொழி.....
வந்து 
தன்னை மீட்டி
செல்ல போர் வழி.....

வைதேகி 
தேகம் மெலிந்த
சுடர்ஒளி......
அஞ்சனை மைந்தனிடம்
நெஞ்சனைத்த நாயகனுக்கு
அளித்தாள்
சூடாமணி......

சக்திவேல்