காளி பூஜை 5
மரகத மின் மலரே, மயில் தோகை எழிலே,
மாதுளை வாய் மலர்ந்த பைங்கிளியே....
மான் விழி அழகே, மாணிக்க விண் ஒளியே,
மாய மையில் மேணியே, மதி மயக்கும் மோகினியே....
மா தவ தேவியே, மா மலையரசன் மகளே,
மா மகுட மாலைசூடியே, மணசூடியே மாலினியே....
பேரழகே பூங்கன்னமே, எழில் பச்சை வண்ணமே,
பரிமளம் கமழும், பூவேந்தும் மென்னங்க அன்னமே....
அன்பே அபிராமியே, அமுதே அருள்வாமியே,
ஆயிர பண் பாடியே, வருவேன் திருவடி தேடியே....
சக்திவேல்
https://sakthivelkaliraj.blogspot.com