சனி, 11 ஜனவரி, 2025

ஆசை பைத்தியங்கள் 78

ஆசை பைத்தியங்கள் 78

விண்ணொளியும்
மின்னொளியும் 
அந்தி சாயம் பூசிக்கொண்டன....
இலைகளும்
கிளைகளும்
தூரத்து மரங்களும் மலைகளும் - கூட
ஆஹா என பேசிக்கொண்டன....

சக்திவேல்

ஆசை பைத்தியங்கள் 77


ஆசை பைத்தியங்கள் 77

தோகை மயிலே வண்ண தோகை மயிலே..... ஆடல் எழிலே மேனி ஆடல் எழிலே.....

மழை வெயிலே சாலை மின்னும் ஒயிலே..... மாலை சாயலே மங்கை தங்க மயிலே.....

தோழி இல்லையே தோள்கள் கூட வில்லையே..... தொட வில்லையே இடை கொடி முல்லையே.....

மொழி வழியே வெட்கம் விட வில்லையே..... விழி வழியே கூட விடை வரவில்லையே......

சக்திவேல்


வியாழன், 7 நவம்பர், 2024

ஆசை பைத்தியங்கள்

ஆசை பைத்தியங்கள் 76

வான வில்
வண்ணம் கொஞ்சம்,
அவள் விழி
குழல், இதழ் என
எண்ணம் கொஞ்சம்,
எழில்மிகு மயில் வந்தது..

அமுத தமிழ்
வார்த்தை கொஞ்சம்,
அழகு மொழி
முகிழ், குமிழ் என
வர்ணனை கொஞ்சம்,
கவின்மிகு கவிதை தந்தது..

 சக்திவேல்