வெள்ளி, 11 அக்டோபர், 2024

கிருஷ்ண வர்ணம் 2

கிருஷ்ண வர்ணம் 2

புல்வெளிகள் செழித்தாடும்,
பல்லுயிர்கள் பறந்தாடும்,
யமுனை நதியோடும்,
அந்நதியோரம் ஆனந்தவனம்....
ஆனது பிருந்தாவனம்.....

மானோடும், மயிலோடும்,
அணில், முயல்கள் துள்ளியோடும்,
அழகியல் வழிந்தோடும்,
பூத்து குலுங்கும் பூங்காவனம்....

யாதவ குல 
மாதவன் ஆடும்....
விழியாடும் மாதவியுடன்
களியாடும் -
விளையாடும் பிருந்தாவனம்....

அங்கு எவர் வரினும்
இருந்தனர் 
மகிழ்ந்த வண்ணம்....
ஆதலால் பிருந்தாவனம்
இருந்தது நிறைந்தது 
என்றென்றும்
வருந்தா வண்ணம்....

கண்ணன், பலராமன் 
கூட்டணியே குதூகலம்....
சிறியோர் பெரியோர் 
கூட்டத்திற்கே
பிருந்தாவனம் ஆனது
விளையாட்டு மைதானம்....

அவதார நோக்கம் - என்று
அறியாமல் அதிசயம் நிகழும்....
அங்கே நாளும் 
ஒரு அற்புத தினம்....

கோபாலன் குழலிசையில்
கோபியர், ராதை
குரலிசையில், குழலசைவில்....

வண்டுகள் 
நாவில் தேன்சூடும் -
அதற்கு நாளும் 
தாவரங்கள் பூச்சூடும்....

குயில்கள் 
குருவிகள் பாச்சூடும் - 
அதற்கு நல்ல 
பொழுதுகள் ஒளிசூடும்....

அனு தினம் புது மணம்,
பால் மணம் கமழும் -
பசு வனம்.... பிருந்தாவனம்....
அது பிரபாவதி ராதை மனம்.....

அனந்தம் பொங்கும் அதிர்ஷ்டவனம்....
அற்புதம் நிகழும் அதிசயவனம்....
பிருந்தாவனம் பூமியில் ஆனது சொர்க்கவனம்....

காரணம் அதற்கு -
பகவான் பூசிய கிருஷ்ண வர்ணம்....

சக்திவேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக