காட்டு பூக்கள்
அனைவர்
கண்ணுக்கும் தெரியுது.....
மரம், செடிகள் முளைக்குது.....
வானுயர..... விண்ணுயர.....
எவர்
கண்ணுக்கும் தெரியாது.....
எத்தனையோ வேர்கள்
அதற்கு உழைக்குது.....
அயராமல்..... தானுயராமல்.....
மரம், செடிகளாய்
ஒரு சிலர்
வளர்ந்தாலும், உயர்ந்தாலும்.....
வேர்களாய் பலர் -
வெளியில் கூட.....
தெரிவது இல்லை.....
காலம்
வரையாத வரலாறு.....
வேர்கள்
வற்றாத பேராறு.....
வேறுதலாய்
அல்லாமல் மாறுதலாய்.....
வேருக்கும்,
வேர்களாய் ஆனவர்கட்கும்
ஆற்றாத ஆற்றுதலாய்.....
போற்றாத போற்றுதலாய்.....
இக்கவி இயற்றுதலாய்
ஆகட்டும் சிறு ஆறுதலாய்......
கா.சக்திவேல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக