ஆசை பைத்தியங்கள்
தங்க மயில்
கழுத்தினில்
மின் மினுக்கும்
மின்மினி மிதக்கும்
மணி முத்து மாலை.....
தந்தும்
அவள் கேட்டது
இனி இனிக்கும்
இமை பணிக்கும்
இதழ் பதிக்கும்
இன்ப முத்த மாலை.....
அன்ன மகள்
வண்ண மகள்
மென் மேனியோ
பூத்து குலுங்கும்
பூஞ்சோலை....
ஆயினும்
அழகு அரும்பும்
அவள்
அங்கம் விரும்பும்
அவன் சூடும்
பூக்கள் மாலை.....
சக்திவேல்
https://sakthivelkaliraj.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக