செவ்வாய், 17 செப்டம்பர், 2024

காளி பூஜை 6


காளி பூஜை 6

தேவியே செந்தேவியே
செந்தூர மா தேவியே.....
மேனியே செம்மேனியே
செம்மாதுளை பூ மேனியே.....















ருத்திரன் முன்நெற்றி நேத்திரன்
மீட்டிய விசித்திர வீணையோ.....
சித்திரன் சீரியதிறன் திறம்பட
தீட்டிய செம்பொன் மேனியோ.....
சீர் திறன் செந்தமிழ் கவித்திறன் 
பாடிய எதுகை மோனையோ.....

ஒளித்திரள் எழில் வண்ணத்திரள்
மோதிய நாட்டிய நடனமோ.....
ஓசைத்திறன் தேன்குழல் 
பூங்குயில் இன்னிசைத்திறன்
ஒலிக்கும்  புது மோகன ராகமோ.....
உயர் திறன் வான்வரை ஓங்கு திறன்
எங்கும் இன்ப மலையோ 
பொங்கும் அமுத நதியோ.....

செஞ்சாரல் வீசும் செம்மழையோ
செந்தோகை ஆடும் செம்மயிலோ.....
செம்புனலோ செங்கனலோ
செந்நிலவோ செந்நிலமோ.....

செந்தாமரை இதழ்  கடலோ -- ஆங்காங்கே
செம்பருத்தி நிறை தீவோ.....

தேவியே செந்தேவியே
செந்தூர மா தேவியே.....
மேனியே செம்மேனியே
செம்மாதுளை பூ மேனியே.....

சக்திவேல்
sakthivelkaliraj.blogspot.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக